Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய தலைவர்... புதுப் பொலிவுடன் வீரர்கள்... இலங்கையைத் தூக்கிப் போட்டு மிதிக்குமா இந்தியா?

காலே: புதிய கேப்டனின் தலைமையில் இந்திய அணி, இலங்கை அணியை தனது முதல் டெஸ்ட் போட்டியில் சந்திக்கத் தயாராகி இருக்கிறது. விராத் கோஹ்லியின் தலைமைத்துவம் இந்த டெஸ்ட் தொடரில் உற்றுநோக்கப்படவுள்ளதால் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி புது வீச்சுடன் இலங்கையைச் சந்திக்க காத்திருக்கிறது.

கடந்த 22 வருடத்தி்ல் ஒருமுறை கூட இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை. இந்த வறட்சியை கோஹ்லி தலைமையிலான இந்திய அணி போக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

நல்ல கிரிக்கெட் ஆடுவதற்காக இலங்கை வந்துள்ளதாக கேப்டன் கோஹ்லி கூறியுள்ளார். சங்கக்கராவை சமாளித்து வெற்றி கொள்வதே தங்களது முக்கிய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தொடருடன் சங்கக்கரா ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 டெஸ்ட் போட்டிகள்

3 டெஸ்ட் போட்டிகள்

இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி காலேவில் ஆகஸ்ட் 12ம் தேதி தொடங்கவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் ஆடவுள்ளன.

2 டிவியில் பார்க்கலாம்

2 டிவியில் பார்க்கலாம்

சோனி சிக்ஸ் மற்றும் சோனி கிக்ஸ் ஆகிய இரு சானல்களில் இதை நேரடியாக பார்க்கலாம். இதில் சிக்ஸ் ஆங்கிலத்தில் இருக்கும். கிக்ஸ், இந்தியில் இருக்கும்.

தரவரிசையில் நாம லீடிங்

தரவரிசையில் நாம லீடிங்

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 5வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 இடம் பின்தங்கி 7வது இடத்தில் இருக்கிறது.

வாஷ் அவுட் செய்தால் நம்பர் 2 ஆகலாம்

வாஷ் அவுட் செய்தால் நம்பர் 2 ஆகலாம்

இந்தத் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றால் 2வது இடத்திற்கு முன்னேற முடியும். ஆனால் அது நடக்க வேண்டும் என்றால், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தாக வேண்டும்.

இங்கிலாந்து வென்றால்

இங்கிலாந்து வென்றால்

5வது போட்டியில் இங்கிலாந்து வென்று 4-1 என்ற கணக்கி தொடரை வென்றால் இந்தியாவுக்கு 3வது இடமே கிடைக்கும். ஒருவேளை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்று விட்டால், நாம் 7வது இடத்திற்குப் போய் விடுவோம். நம்முடைய 5வது இடத்திற்கு இலங்கை வந்து விடும்.

எங்கெங்கு போட்டிகள்

எங்கெங்கு போட்டிகள்

முதல் டெஸ்ட் போட்டி காலேவிலும், 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளன. கொழும்பில் சாரா ஓவல் மற்றும் சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.

தினசரி காலை 10 மணிக்கு

தினசரி காலை 10 மணிக்கு

டெஸ்ட் போட்டிகள் தினசரி காலை 10 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.

கடைசியாக நாம் வென்றது

கடைசியாக நாம் வென்றது

கடசைசியாக இலங்கையில் அந்த நாட்டு அணியை வென்று நாம் தொடரைக் கைப்பற்றியது 1993ல்தான். அப்போது அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது.

இலங்கைக்கு சாதகம்

இலங்கைக்கு சாதகம்

இலங்கை அணி கடைசியாக இந்தியாவில் 2010ம் ஆண்டு நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1- என்ற கணக்கில் டிரா செய்தது. அப்போது கேப்டனாக இருந்தவர் டோணி.

இவர்கள் முக்கியமானவர்கள்

இவர்கள் முக்கியமானவர்கள்

இந்திய அணித் தரப்பில் ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் சற்று முக்கியமானவர்கள்.

ரொம்ப அனுபவசாலி பஜ்ஜிதான்

ரொம்ப அனுபவசாலி பஜ்ஜிதான்

ஹர்பஜன் சிங்தான் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். 102 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர். இலங்கையில் 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.

போட்டிகள் விவரம்

போட்டிகள் விவரம்

ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 20 முதல் 24 வரை 2வது டெஸ்ட் போட்டியும், 28 முதல் செப்டம்பர் 1 வரை 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெறும்.

இந்திய அணி

இந்திய அணி

கேப்டன் விராத் கோஹ்லி, ஷிகர் தவான், முரளி விஜய், ராகுல், சட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சாஹா, ஹர்பஜன் சிங், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா, வருண் ஆரோன்.

இலங்கை அணி

இலங்கை அணி

கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு திரிமன்னே, கெளசல் சில்வா, திமுத் கருனரத்னே, குமார் சங்கக்கரா, தினேஷ் சன்டிமால், உபுல் தரங்கா, ஜெகன் முபாரக், குஷால் பெரேரா, ரங்கன ஹெரத், தில்ருவன் பெரேரா, தரிந்து கெளசல், நுவன் பிரதீப், தம்மிகா பெர்னாண்டோ, விஸ்வா பெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா.

Story first published: Monday, August 10, 2015, 16:11 [IST]
Other articles published on Aug 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+