கோஹ்லி – அனுஷ்கா எதிர்பார்க்காத வாழ்த்து
டெல்லி: இந்திய கிரி்க்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்தாலும், நம் நாட்டில் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் அதைக் கொண்டாடி வருகின்றனர்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், இது தான் பல பத்திரிகைகளில் முக்கியச் செய்தியாக அமைந்தது. பல நிறுவனங்கள் இதை தங்களுடைய விளம்பரத்துக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

விராட் கோஹ்லி- அனுஷ்கா ஜோடி மட்டுமல்ல, உலகில் கல்யாணமான எந்த ஒரு ஜோடியும் விரும்பாத ஒரு வாழ்த்து, அவர்களுக்கு வந்துள்ளது. அதைத்தான் டுவிட்டரில் பலரும் கிழி கிழி என்று கிழித்து கொண்டிருக்கின்றனர்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இந்த செய்தியை படிக்காமல், உங்களுடைய மற்ற வேலையைப் பார்க்கவும்.
கோஹ்லி - அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து பலரும் செய்திகள் வெளியி்ட்டுள்ள நிலையில், ஆணுறை தயாரிக்கும் டியூரக்ஸ் நிறுவனம், டுவிட்டரில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
வாழ்த்துக்கள் அனுஷ்கா - விராட். உங்களுக்கு இடையில் வேறு எதுவும் வரக் கூடாது. எங்களுடையதைத் தவிர' என்று டுவிட்டரில் வந்த வாழ்த்து செய்திக்கு போட்டி போட்டி மக்கள் கொந்தளித்துள்ளனர்.
காலை 6 முதல் இரவு 10 மணி வரை ஆணுறை தொடர்பான விளம்பரம் கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்யாணமாகும் அரசியல்வாதிகளுக்கு இதுபோல் வாழ்த்து கூறுவீர்களா என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி சும்மா இருக்கும்போது கிடைக்கும் விளம்பரத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள்.
Story first published: Thursday, December 14, 2017, 11:10 [IST]
Other articles published on Dec 14, 2017


Click it and Unblock the Notifications