
டிராவிட் ஃபார்முலா
முதல் 2 போட்டிகளில் சொதப்பிய இந்திய வீரர்கள், அடுத்த 2 போட்டிகளில் தரமான கம்பேக்கை கொடுத்துள்ளனர். ருதுராஜ் கெயிக்வாட், ஆவேஷ் கான், யுவேந்திர சாஹல், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தங்களது இடத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டனர். இதற்கு காரணம் ராகுல் டிராவிட் தான்.

புது பிரச்சினை
இந்நிலையில் அதே ராகுல் டிராவிட்டால் தான் புது பிரச்சினை கிளம்பியுள்ளது. மற்ற பயிற்சியாளர்களை போன்று இல்லாமல், டிராவிட் எப்போதுமே ஒரே ப்ளேயிங் 11-ஐ விரும்பக்கூடியவர். 2 தோல்விகளையும் பொருட்படுத்தாமல் 4 போட்டிகளில் தொடர்ந்து ஒரே ப்ளேயிங் 11-ஐ விளையாட வைத்தார். இது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

2 வீரர்களுக்கு சோகம்
ஆனால் இது 2 வீரர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. முதன்முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் தங்களது முதல் போட்டிக்காக காத்துள்ளனர். இன்றைய போட்டியில் அறிமுகமாகவில்லை என்றால், இனி அடுத்ததாக இதே போன்ற வாய்ப்பு கிடைப்பதற்கு நீண்ட காலம் ஆகலாம்.

என்ன காரணம்
சீனியர் வீரர்கள் இல்லாததால், இவர்கள் சேர்க்கப்பட்டனர். இதன் பிறகு அணிக்கு வந்துவிடுவார்கள் என்பதால் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க கூடும். இதுமட்டுமல்லாமல், தற்போது விளையாடும் போட்டிகள் மூலம் தான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களும் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











