Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லைப் இன்சூரன்சை புதுப்பிச்சிட்டீங்களா... கணவர்களுக்கு வாழ்த்து சொன்ன மயங்க் அகர்வால்

டெல்லி: வடமாநிலங்களில் தங்களின் கணவர்களின் ஆயுள் நீட்டிப்பிற்காக கர்வா சவுத் என்ற விழாவை அவர்களின் மனைவிகள் மேற்கொள்கின்றனர்.

இந்த விழா நேற்று வடமாநிலங்களில் களைகட்டியது. பிரபலங்களும் தங்கள் இல்லங்களில் இதை கொண்டாடினர்.

இந்நிலையில் தங்களின் லைப் இன்சூரன்சை புதுப்பித்துள்ள கணவர்களுக்கு பஞ்சாப் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் குறும்புடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

வடமாநிலங்களில் நேற்றைய தினம் கர்வா சவுத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக பண்டிகையை கொண்டாடினர். பிரபலங்களும் இந்த பண்டிகையையொட்டி மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

புதுப்பித்த கணவர்களுக்கு வாழ்த்து

புதுப்பித்த கணவர்களுக்கு வாழ்த்து

இந்நிலையில் தங்களின் லைப் இன்சூரன்சை இந்த விழாமூலம் புதுப்பித்துள்ள கணவர்களுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் குறும்பு கலந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2018ல் அஷிதா சூட் என்பவரை திருமணம் செய்துள்ள நிலையில், இவர் வீட்டிலும் இந்த விழா களைகட்டியது.

மயங்க் அகர்வால் வாழ்த்து

மயங்க் அகர்வால் வாழ்த்து

இந்த பண்டிகையில் அனைவரது வீடுகளிலும் அன்பு, மகிழ்ச்சி உள்ளிட்டவை நிறைந்து இருக்கட்டும் என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கர்வா சவுத் தினத்தில் அனைவரும் தங்களது மனைவிகளுடன் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2வது பஞ்சாப் வீரர்

2வது பஞ்சாப் வீரர்

இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய மயங்க் அகர்வால் அந்த அணியின் கேஎல் ராகுலை அடுத்து அணியில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை எட்டியுள்ளார். ராகுல் 670 ரன்களை குவித்துள்ள நிலையில், மயங்க் அகர்வால் 11 போட்டிகளில் விளையாடி 424 ரன்களை குவித்துள்ளார்.

Story first published: Thursday, November 5, 2020, 8:45 [IST]
Other articles published on Nov 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+