Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முஸ்லீம் என்பதால் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படவில்லையா? கம்பீர், அகார்கருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரரான சர்பராஸ் கான் இன்று 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சர்பராஸ் கான், மொத்தமாக 371 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும்.

இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும். இதுவரை 56 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள சர்பராஸ் கான் 4759 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 16 சதம், 15 அரை சதம் அடங்கும். இதில் அவருடைய சராசரி 65 என்ற அளவில் இருக்கின்றது.

Sarfaraz khan

சர்பராஸ் கான் கடைசியாக 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சதம் அடித்து அதன் பிறகு சொற்ப ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் இருந்த சர்பராஸ் கான் அணியில் நடக்கும் விஷயத்தை பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தெரிவித்த கம்பீர் அவரை அணியை விட்டு நீக்கினார்.

இதனை அடுத்து எந்த ஒரு இந்திய அணிலும் சர்ஃபிராஸ் கான் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாள் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் சர்பராஸ்கான் இடம்பெறவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முஹம்மத், சர்பராஸ்கான் ஏன் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அதற்கு அவருடைய மதம் காரணமா? இந்த விவகாரத்தில் கம்பீர் எங்கு நிற்கிறார் என்று நம் அனைவருக்குமே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார். சமா முஹம்மதின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்து மிகவும் வருத்தத்தை தருகிறது.

சர்பராஸ் கானுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்திய கிரிக்கெட்டில் அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததே கிடையாது. அசாருதீன் கேப்டனாக இருந்தபோது கூட மதம் தொடர்பான விமர்சனங்கள் இந்திய அணியில் ஒரு புகாராகவே வைக்கப்படும்.
ஆனால் சர்ஃபராஸ் கான் விவகாரத்தில் எந்த ஒரு மத தொடர்பான விஷயமும் காரணம் கிடையாது என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 22, 2025, 15:39 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+