Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நியாயம் வேண்டாமா.. ஜெய் ஷா கையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.. ஆசிய கோப்பையில் எத்தனை சொதப்பல்கள்!

கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜெய் ஷா செய்த சொதப்பல்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதனை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைகள் குறித்து பார்க்கலாம்.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு மட்டும் ரிசர்வ் டே அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக் கோப்பை தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டும் நடப்பதாக இருந்தது. ஆனால் பிசிசிஐ தரப்பில் இந்திய அணி வீரர்களை பாகிஸ்தான் அணிக்கு அனுப்ப விரும்பவில்லை. இதனால் ஆசியக் கோப்பையை இடமாற்றம் செய்ய பிசிசிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

Controversies and bad decisions took by ACC President Jay Shah in Asia Cup 2023 Tournament

ஆனால் ஆசியக் கோப்பை நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இறுதியாக ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கர் சார்பில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் போட்டிகளை நடத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுப்சில் பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்துள்ளது.

இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, துபாயில் அதிக வெப்பம் இருக்கும் என்று பதில் அளித்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கையில் நடத்தினால் போட்டிகளை ஹம்பந்தோட்டா மற்றும் டம்புல்லாவில் போட்டிகளை நடத்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒளிபரப்பு நிறுவனம் டம்புல்லாவை நிராகரிக்க, பிசிசிஐ தரப்பில் ஹம்பந்தோட்டா மைதானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி கொழும்பு மற்றும் பாலக்கலேவில் போட்டிகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையின் மழை காலத்தில் இந்த ஒரு பகுதிகளிலும் தான் அதிகளவு மழை பெய்யும். இதனை கூட அறியாமல் ஏசிசி முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் பாதியோடு கைவிடவிப்பட்டது. இதனால் ஒளிபரப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க, சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ரிசர்வ் டேவை ஏசிசி அறிவித்துள்ளது.

இதனால் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கொந்தளித்துள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமே முக்கியம் என்றால், ஆசியக் கோப்பை தொடர் எதற்காக நடத்த வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்தி வெற்றியாளரை ஆசிய சாம்பியனாக அறிவிக்கலாமே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ நிர்வாகத்தை ஜெய் ஷா பயன்படுத்தி வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Saturday, September 9, 2023, 16:26 [IST]
Other articles published on Sep 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+