Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழிவாங்கலா? பாதுகாப்பு நடவடிக்கையா ? ஆத்திரத்தில் கோலி ரசிகர்கள்.. பதறி போன பிசிசிஐ அதிகாரிகள்

மொஹாலி: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது.

இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். ஆனால் இந்தப் போட்டியை கொண்டாட பிசிசிஐ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கவில்லை. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் பெருமளவு குறைந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20, இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆகிய தொடர்களுக்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கும் பிசிசிஐ, விராட் கோலியின் 100வது டெஸ்ட்க்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பழிவாங்கும் பிசிசிஐ?

பழிவாங்கும் பிசிசிஐ?

விராட் கோலிக்கும், கங்குலிக்கும் ஏற்கனவே கேப்டன்ஷி விவகாரத்தில் மோதல் நிலவியதால், பிசிசிஐ பழிவாங்குவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பிசிசிஐ ரசிகர்களை மொஹாலி டெஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஸ்பெஷல் ஹாஸ்டேக் மூலம் டிரெண்டிங் ஆனது.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

ரசிகர்களை அனுமதிக்கவில்லை என்றால் போட்டியை புறக்கணிக்க உள்ளோம் என்றும் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் பதறி போன பிசிசிஐ, சந்திகார் என்பது சிறிய நகரம், அங்கு தினசரி 30, 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது வீரர்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டை தரும் என்பதால் தான் பார்வையாளர்களுக்கு அனுமதி தரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Recommended Video

IND vs SL : T20 Cricket-ல் புதிய சாதனை படைத்த Rohit Sharma
மாற்ற முடியாது

மாற்ற முடியாது

மேலும் மொஹாலியில் சர்வதேச போட்டி நடைபெற்று நீண்ட நாட்களாகிவிட்டதால் சுழற்சி முறையில், அங்கு போட்டி நடத்த முன்னதே திட்டமிடப்பட்டதால் கடைசி நேரத்தில் மாற்ற முடியாத நிலையில் பிசிசிஐ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 100வது டெஸ்ட்டையொட்டி கோலியை கேப்டன் பொறுப்பை ஏற்க பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 1, 2022, 11:46 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+