Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மதத்தை மாத்து.. ஸ்டிரெய்ட்டா சொர்க்கத்துக்குப் போகலாம்" ... சர்ச்சையில் பாக். கிரிக்கெட் வீரர்!

இஸ்லாமாபாத்: இலங்கை கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷனிடம், முஸ்லீம் மதத்துக்கு மாறினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கூறி தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமத் செஷாத்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை இலங்கையில் நடந்த ஒரு நாள் போட்டியின் முடிவில் தில்ஷனிடம், இவ்வாறு கூறியுள்ளார் ஷெஷாத். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

தம்புல்லா

தம்புல்லா

இலங்கையின் தம்புல்லாவில் கடந்த சனிக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி நடந்தது. அப்போட்டி முடிந்ததும் வீரர்கள் பெவிலியன் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

முஸ்லீமாக மாறினால்

முஸ்லீமாக மாறினால்

அப்போது ஷெஷாத், திலகரத்னே தில்ஷனிடம் சென்று, நீங்கள் முஸ்லீம் அல்லாதவராக இருந்து, முஸ்லீமாக மதம் மாறினால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எது செய்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. கண்டிப்பாக உங்களுக்கு சொர்க்கம்தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

தில்ஷன் பதில் புரியவில்லை

தில்ஷன் பதில் புரியவில்லை

அதற்கு தில்ஷன் ஏதோ பதிலளித்தார். ஆனால் அதுசரிவரக் கேட்கவில்லை. கேமராவில் இவர்கள் பேசியது பதிவாகியுள்ளது.

அப்ப சோதனைகளைச் சந்திக்க ரெடியாகு

அப்ப சோதனைகளைச் சந்திக்க ரெடியாகு

ஆனால் தில்ஷன் அளித்த பதிலைக் கேட்ட ஷெஷாத், அப்படியானால் சோதனைகளைச் சந்திக்க ரெடியாகுங்கள் என்று ஷெஷாத் கூறியுள்ளார்.

நேரில் அழைத்து விசாரணை

நேரில் அழைத்து விசாரணை

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குத் தகவல் போனது. இதையடுத்து புதன்கிழமை லாகூருக்கு வரவழைக்கப்பட்ட ஷெஷாத்திடம் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தனிப்பட்ட பேச்சு என விளக்கம்

தனிப்பட்ட பேச்சு என விளக்கம்

இதுகுறித்து வாரிய பொது மேலாளர் அகா அக்பர் கூறுகையில், இது தில்ஷனுடன் நடந்த தனிப்பட்ட பேச்சு என்று விளக்கம் அளித்துள்ளார் ஷெஷாத். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத் தரப்பிலோ அணி நிர்வாகம் சார்பிலோ எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார்.

முஸ்லீம் தந்தை - சிங்களத் தாய்

முஸ்லீம் தந்தை - சிங்களத் தாய்

தில்ஷனின் தந்தை முஸ்லீம் ஆவார். அவரது தாயார் சிங்கள பெளத்தர் ஆவார். தில்ஷனின் உண்மையான பெயர் துவான் முகம்மது தில்ஷன்.

கிரிக்கெட்டுக்காக பெயர் மாற்றம்

கிரிக்கெட்டுக்காக பெயர் மாற்றம்

கிரிக்கெட் ஆட வருவதற்கு முன்பு வரை முஸ்லீம் பெயருடன் தான் இருந்தார் தில்ஷன். 1999ம் ஆண்டு அவர் கிரிக்கெட்டுக்கு வந்தபோது தனது பெயரை திலகரத்னே முடியனசெலகே தில்ஷன் என மாற்றிக் கொண்டார். தன்னை முஸ்லீமாக அடையாளம் காட்டிக் கொள்ள அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முழுமைாயன சிங்கள பெளத்தராக தன்னைக் காட்டிக் கொள்ள இப்படி பெயர் மாற்றிக் கொண்டாராம்.

குடும்பமே தாய் வழியில்தான்

குடும்பமே தாய் வழியில்தான்

தில்ஷனின் இளம் வயது பயிற்சியாளர் ரஞ்சன் பரவணவிதனா கூறுகையில், தில்ஷன் மட்டுமல்லாமல், அவரது சகோதரர்கள், சகோதரிகள் என அனைவருமே தங்களது தாயாரின் மதத்தைத்தான் சிறு வயதிலிருந்து பின்பற்றி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, September 4, 2014, 12:43 [IST]
Other articles published on Sep 4, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+