Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா ஊரடங்கு பொறுமைய கத்துக் கொடுத்திருக்கு... இளம்வீரர் பிரத்வி ஷா

டெல்லி: கடந்த ஐபிஎல் தொடரின்போது பயிற்சிக்கு முந்தைய கூட்டத்திற்கு தான் தாமதமாக சென்றதற்காக ரிக்கி பாண்டிங் தன்னை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சுற்றி 10 முறை ஓடுமாறு தண்டனை அளித்ததை இளம் வீரர் பிரித்வி ஷா நினைவு கூர்ந்துள்ளார்.

கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விட்டில் தன்னுடைய தந்தைக்கு ஆம்லெட் போட்டு கொடுப்பது போன்ற சமையல் வேலைகளில் உதவி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பப்ஜி விளையாடுவதிலும் தன்னுடைய நேரம் கழிவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த லாக்டவுன் மக்களுக்கு பொறுமையை கற்றுக் கொடுத்துள்ளதாகவும் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

தடை பெற்ற இளம்வீரர்

தடை பெற்ற இளம்வீரர்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இளம்வீரர் பிரித்வி ஷா, கடந்த ஆண்டில் இதற்கென தடை பெற்று தற்போது மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். கடந்த நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் அவர் இடம்பெற்று விளையாடினார். இந்நிலையில், தன்னுடைய தடைக்காலத்தில் தான் இந்திய அணிக்காக விளையாடாமல் வீட்டில் இருந்தது தனக்கு டார்ச்சராக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரன் எடுக்கும் தாகம்

ரன் எடுக்கும் தாகம்

கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கியுள்ள பிரித்வி ஷா, தன்னுடைய டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் நேரலையில் உரையாடினார். அப்போது, பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தடைக்காலத்திலிருந்து மீண்டு வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா, தனக்கு ரன்களை குவிக்கும் தாகம் முன்பை விட மேலும் அதிகரித்து காணப்பட்டதாகவும், தன்னுடைய வேகம் முன்பைவிட அதிகரித்ததை தன்னால் உணர முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் முடக்கம்

ஊரடங்கு உத்தரவால் முடக்கம்

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தான் தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால், தன்னுடைய தந்தைக்கு ஆம்லெட் போட்டுக் கொடுப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பப்ஜி விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டிற்குள் பயிற்சிகள் மேற்கொண்டு தன்னுடைய பிட்னசை மேம்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பொறுமையால் அமைதி கிடைக்கும்

பொறுமையால் அமைதி கிடைக்கும்

நம்முடைய வாழ்க்கையில் பலருக்கு பொறுமை என்பதே இருப்பதில்லை என்று கூறியுள்ள பிரித்வி ஷா, இந்த நேரத்தில் அதை கடைபிடிக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தானும் அதற்காக முயற்சித்து வருவதாகவும் இதன்மூலம் ஒருவருக்கு அமைதி கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் உத்தரவால் கலக்கம்

பயிற்சியாளர் உத்தரவால் கலக்கம்

தொடர்ந்து தன்னுடைய ஐபிஎல் அணி டெல்லி கேபிடல்ஸ் குறித்தும் பகிர்ந்து கொண்ட பிரித்வி, கடந்த ஆண்டில் பயிற்சிக்கு முந்தைய கூட்டத்திற்கு தான் தாமதமாக வந்ததால், தன்னுடைய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சுற்றி 10 ரவுண்டுகள் ஓட உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தன்னை அச்சுறுத்தவே அவ்வாறு கூறியதாகவும் தான் மைதானத்தை சுற்றி ஓடவில்லை என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 23, 2020, 10:13 [IST]
Other articles published on Apr 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+