Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“துரோகம் பண்ணிட்டாங்களே”.. தென்னாப்பிரிக்க அணி வீரருக்கு கொரோனா உறுதி.. மறைத்து நாடகமாடியது அம்பலம்

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்க அணி வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதை மறைத்து நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாக அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 197 ஆல் அவுட் ஆனது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இதனால் இந்திய அணி தற்போது 130 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. அதில் 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டத்தில் அதிக இலக்கை நிர்ணயிக்க முணைப்பு காட்டி வருகிறது.

 கொரோனா பிரச்சினை

கொரோனா பிரச்சினை

இந்நிலையில் தான் கொரோனா சர்ச்சை கிளம்பியுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவே இந்திய அணி தயங்கியது. எனினும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறது.

என்ன ஆனது

என்ன ஆனது

இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுவும் வீரருக்கு கொரோனா உறுதியானதையும் மறைத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் போட்டிகளை நடத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி விளக்கம்

தென்னாப்பிரிக்க அணி விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவருக்கு கொரோனா பாதித்தது உண்மை தான். ஆனால் அது தற்போது ஏற்பட்டது கிடையாது. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு முறையான சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அணியில் இணைக்கப்பட்டார் எனத்தெரிவித்துள்ளது.

Recommended Video

Shami,Bumrah,Shardul வெறித்தனம்! 197க்கு All Out ஆன South Africa | OneIndia Tamil
துரோகம்?

துரோகம்?

கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதும், தென்னாப்பிரிக்க அணி கொடுத்த வாக்குறுதியை நம்பி பிசிசிஐ சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் இப்படி உண்மையை மறைத்து போட்டிகளை நடத்தியிருப்பது பிசிசிஐ-கே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, December 29, 2021, 10:33 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+