Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா மட்டும் இங்க வரலைனா தலையில் துண்டு தான்.. உலகை ஆட்டிப்படைத்த கிரிக்கெட் அணிக்கு நேர்ந்த கதி!

சிட்னி : கடந்த 30 ஆண்டுகளில் உலகின் முன்னணி கிரிக்கெட் அணி எது எனக் கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு ஆஸ்திரேலியா என்றே அனைவரும் சொல்வோம்.

கொரோன வைரஸ் வரும் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கிரிக்கெட்டில் பல ஆயிரம் கோடிகளை குவித்து வந்தது.

ஆனால், தற்சமயம் கிரிக்கெட் போட்டிகள் நடத்த வாய்ப்பு இல்லாததால் பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

திட்டம் தயார்

திட்டம் தயார்

இந்திய அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆட செல்லாவிட்டால் மிகப் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அதை தவிர்க்க இப்போது இருந்தே பல திட்டங்களை தீட்டி வருகிறது. இந்திய அணி மட்டுமே தங்க புத்தம் புது ஹோட்டல் கூட தயார் ஆக உள்ளது. மேலும், ஒரு அதிரடி திட்டமும் வைத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் முற்றிலும் தடை பட்டுள்ளன. ஆங்காங்கே சில நாடுகள் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினாலும், அது குறித்து பெரும் அச்சம் உள்ளது.

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

மேலும், உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு பயணம் செய்வது ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. அப்படியே வேறு நாட்டிற்கு சென்றாலும், பல நாடுகளில் 14 நாள் கட்டாய தனிமைபப்டுத்தும் நடைமுறை அமலில் உள்ளது.

பிசிசிஐ கெத்து

பிசிசிஐ கெத்து

அதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது. 2020 ஐபிஎல் தொடரை கூட தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ. ஆனாலும், தங்கள் சர்வதேச அணி வீரர்களுக்கு மட்டுமில்லாமல், உள்ளூர் அணி வீரர்கள், உதவியாளர்களுக்கு கூட சம்பளத்தை சரியாக கொடுத்து கெத்து காட்டி உள்ளது பிசிசிஐ.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிலை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிலை

மற்ற கிரிக்கெட் அணிகள் எல்லாமே சம்பளம் கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற சிறிய அணிகள் மட்டுமல்ல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வளமான கிரிக்கெட் அமைப்புகள் கூட தட்டுத் தடுமாறி வருகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபரில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடர் நடக்குமா? என்பதில் பெருத்த சந்தேகம் உள்ளது. அந்த தொடரை விட வேறு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை பற்றித் தான் அதிக கவலை கொண்டுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற உள்ளது. அதில் பெரிய அளவு வருமானம் ஈட்டும் வாய்ப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்புக்கு உள்ளது.

பெரும் நஷ்டம்

பெரும் நஷ்டம்

அந்த தொடர் நடைபெறாவிட்டால் சுமார் 2,200 கோடி அளவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிற்கு நஷ்டம் ஏற்படும் என கருதப்படுகிறது. அதை தவிர்க்க, நவம்பரில் கொரோனா வைரஸ் குறையும் பட்சத்தில் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. அப்போது இந்திய அணியை எப்படியாவது டெஸ்ட் தொடர் ஆட சம்மதிக்க வைத்து ஆஸ்திரேலியா வரவழைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.

ஹோட்டல் தயார்

ஹோட்டல் தயார்

அடிலெய்டு மைதானம் இருக்கும் அதே நகரில் ஒரு புத்தம் புது நட்சத்திர ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது. அது செப்டம்பர் மாதம் நிறைவடையும். அந்த ஹோட்டலில் ஆஸ்திரேலியா வரும் இந்திய வீரர்களை மட்டுமே தங்க வைத்து 14 நாட்கள் தனிமையில் வைத்திருக்க ஆஸ்திரேலியா திட்டம் தீட்டி உள்ளது.

இந்திய அணி செல்லுமா?

இந்திய அணி செல்லுமா?

ஆஸ்திரேலிய அணியின் நிதி சிக்கலை தீர்க்க இந்திய கிரிக்கெட் அணி நவம்பரில் ஆஸ்திரேலியா செல்லுமா? என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. யார் என்ன திட்டமிட்டாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த நிலையில் இருக்கும் என்பதை பொறுத்தே எல்லாம் அமையும்.

Story first published: Thursday, April 23, 2020, 20:45 [IST]
Other articles published on Apr 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+