Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜான்டி ரோட்ஸ் தயார் செய்த புல்லட் காபி... வாசனை இங்கவரைக்கும் வருது சார்

பீட்டர்மாரிட்ஸ்பர்க் : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தனிமைப்படுத்துதலை அறிவுறுத்தியுள்ளது. இதனால், அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் தங்களது வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.

Recommended Video

மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரும் தற்போதைய பீல்டிங் கோச்சுமான ஜான்டி ரோட்சும் ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தன்னுடைய வீட்டில் புல்லட் காபி தயார் செய்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் ஹெல்தியாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்

வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அனைத்து தரப்பினரையும் வீட்டிற்குள்ளேயே முடக்கியுள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. முன்னாள் வீரர்களும் தங்களை வீட்டிற்குள்ளேயே முடக்கிக் கொண்டுள்ளனர். வீட்டிற்குள் இருந்து கொண்டு என்ன செய்வதென்று விதவிதமான யோசனைகளை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

பீல்டிங் கோச்

பீல்டிங் கோச்

இதனிடையே, முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரும் அந்த அணியின் தற்போதைய பீல்டிங் கோச்சுமான ஜான்டி ரோட்சும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் தன்னுடைய வீட்டில் புல்லட் காபி தயார் செய்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புல்லட் காபி தயார் செய்த வீரர்

ஒரு நிமிடங்களுக்கு நீளும் அந்த வீடியோவில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த சமயத்தில், ஹெல்தியாக இருப்பது எவ்வளவு அவசியம் என்று ரோட்ஸ் கூறியுள்ளார். அவர் தயாரித்த புல்லட் காபி, வயிறு நிரம்பிய திருப்தியை அளிப்பதாகவும், உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு அதை பருகினால், திருப்தியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மக்களுக்கு ஆலோசனைகள்

மக்களுக்கு ஆலோசனைகள்

சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக காணப்படும் ஜான்டி ரோட்ஸ், இதுபோன்ற சில வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதன்மூலம் மக்களுக்கு பலவிதமான ஆலோசனைகளை இந்த ஊரடங்கு காலத்தில் அவர் அறிவுறுத்தி வருகிறார். தன்னுடைய வீட்டில் தன்னை தொடர்ந்து பரபரப்பாக வைத்துக் கொள்கிறார் ரோட்ஸ்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் கோச்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் கோச்

கடந்த 1992ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியை ஆடிய ரோட்ஸ், அதே ஆண்டில் இந்தியாவிற்கு எதிரான தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியையும் ஆடினார். இதுவரை 52 டெஸ்ட் போட்டிகள், 245 ஒருநாள் போட்டிகளை ஆடியுள்ள ரோட்ஸ், தற்போது ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் கோச்சாகவும் செயல்பட்டு வருகிறார்.

Story first published: Tuesday, March 31, 2020, 10:55 [IST]
Other articles published on Mar 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+