Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசல்.. 134 ஆண்டு கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை- வீடியோ

ஹாவ் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்து நாம் பார்த்திருக்கிறோம். டி20 ஒருநாள் கிரிக்கெட் என மட்டும் அல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலுமே பும்ரா ஒரே ஓவரில் 35 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு போட்டியான கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒரு வீரர் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்திருக்கும் சாதனை தற்போது நிகழ்ந்திருக்கிறது. கவுன்டி கிரிக்கெட்டில் சஸ்சக்ஸ் அணியும் லெசிஸ்டர்ஷிர் அணியும் பல பரிட்சை நடத்தியது.

county cricket ollie robinson

இதில் சஸ்சக்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் 442 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்களும் எடுத்திருந்தது. லெசிஸ்டர்ஷிர் அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது.

இந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக லெசிஸ்டர்ஷிர் அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். குறிப்பாக லூயிஸ் கம்பர் என்ற வீரர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆலிவ் ராபின்சன் என்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வீரர் ஓவரில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.ஆட்டத்தின் 59வது ஓவரில் ராபின்சன் வீச முதல் பந்தை சிக்ஸர்க்கு விளாசினார்.

இரண்டாவது பந்து பவுண்டரிக்கு செல்ல அது நோபால் ஆக அறிவிக்கப்பட்டது. கவுண்டி கிரிக்கெட் விதிப்படி நோபால்களுக்கு இரண்டு ரன்கள் வழங்கப்படுகிறது. இதனால் ஆறு ரன்கள் கிடைத்தது. மீண்டும் இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடிக்க நான்காவது பந்தில் பவுண்டரி சென்றது.

இதை அடுத்து ஐந்தாவது பந்தும் நோபாலாக மாற அதிலும் கிம்பர் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் ஆறு ரன்கள் கிடைத்தது. இதை அடுத்து 62 பந்துகளில் கிம்பர் சதம் அடித்தார். ஐந்தாவது பந்து மீண்டும் கிம்பர் பவுண்டரி அடித்த ஆறாவது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். அது நோபால் என அறிவிக்கப்பட்டதால் கூடுதலாக இரண்டு ரன்கள் வழங்கப்பட்டது.

இதை அடுத்து மீண்டும் ஆறாவது பந்து ஒரு ரன் அடிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்தார். இதன் மூலம் கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பஷீர் ஒரு ஓவரின் 38 ரன்கள் அடித்த நிலையில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓவரில் 5 பவுண்டரி 2 சிக்சர்கள் மற்றும் மூன்று நோபல் வீசப்பட்டது. எனினும் கிம்பர் 243 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லெசிஸ்டர்ஷிர் அணி 445 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சஸ்சக்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Story first published: Wednesday, June 26, 2024, 19:55 [IST]
Other articles published on Jun 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+