Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா பயம் இல்ல.. மீண்டும் தொடங்குகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக்..முக்கிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

பாகிஸ்தான்: கொரோனா பரவலால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

தொடரின் நடுவே அணி வீரர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தொடர் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

டி20 தொடர்

டி20 தொடர்

பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் 20 ஆட்டங்கள் கராச்சியிலும், மீதமுள்ள 10 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 ப்ளே ஆட்டங்களும் லாகூரில் நடத்துவதாக இருந்தது.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முதன் முதலில் லாகூர் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அடுத்துடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு பரவியது. இதே போல பயிற்சியாளர்களுக்கும் கொரோனா உறுதியானது. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பி.எஸ்.எல்

மீண்டும் பி.எஸ்.எல்

இந்நிலையில் இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 20ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மே 22ம் தேதி முதல் பாகிஸ்தான் வரும் அனைத்து வீரர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் 2 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஜூன் 1 முதல் தொடர் தொடங்கவுள்ளது.

மிகுந்த எச்சரிக்கை

மிகுந்த எச்சரிக்கை

இந்த முறை தொடருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக சர்வதேச தரம்வாய்ந்த பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்நிறுவனம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அணிகள் பின்பற்றுவதை கண்காணிக்கும் என அறிவித்துள்ளது.

Story first published: Sunday, April 11, 2021, 18:21 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+