Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க யாரும் வேணாம்.. நானே பாத்துக்குறேன்.. சிக்ஸர் மழை.. தனி ஆளாக ஜமைக்கா கதையை முடித்த மேயர்ஸ்

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணியை தனி ஆளாக தன் அதிரடி பேட்டிங் மூலம் வெற்றி பெற வைத்தார் கைல் மேயர்ஸ்.

Recommended Video

CPL 2020 MATCH 14 BT VS JT; Tridents won by 36 runs | OneIndia Tamil

ஜமைக்கா தலவாஸ் அணி பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 14வது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன்பு வரை பார்படோஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருந்தது.

பார்படோஸ் துவக்கம்

பார்படோஸ் துவக்கம்

இந்த நிலையில், ஜமைக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பார்படோஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சார்லஸ் 3 ரன்களும், ஹோப் 8 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

மூன்றவதாக களமிறங்கிய மேயர்ஸ் சிறப்பாக ஆடினார். ஹோல்டர் 15, ரஷித் கான் 0, ஆண்டர்சன் 1, நர்ஸ் 2 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் சரிந்து வந்த நிலையில், போட்டியில் தனி ஆளாக ரன் குவித்தார் மேயர்ஸ்.

மேயர்ஸ் அதிரடி

மேயர்ஸ் அதிரடி

அவர் 59 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 8 சிக்ஸ், 3 ஃபோர் அடித்து இருந்தார். இறுதியில் மிட்செல் சான்ட்னர் 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ரெய்பர் 3 ரன்கள் எடுக்க பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்

ஜமைக்கா அணியின் முஜீப் உர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். லாமிச்சேன் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அடுத்து ஜமைக்கா அணி சேஸிங் செய்யத் துவங்கியது.

ஜமைக்கா சொதப்பல்

ஜமைக்கா சொதப்பல்

ஜமைக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் பலர் சொற்ப ரன்களே எடுத்தனர். 20 ரன்களுக்கு மேல் எடுத்த பிளாக்வுட், போன்னர் ஆகியோரும் நிதான ஆட்டம் ஆடி சொதப்பி இருந்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் இல்லாத நிலையில் ஜமைக்கா அணி சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.

பார்படோஸ் பந்துவீச்சு அபாரம்

பார்படோஸ் பந்துவீச்சு அபாரம்

20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஜமைக்கா அணி. மிட்செல் சான்ட்னர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். நர்ஸ் 2 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Story first published: Thursday, August 27, 2020, 11:37 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+