Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே வீரரால் ஜெயித்த பார்படோஸ்.. ஆமை வேகத்தில் ஆடி மண்ணைக் கவ்விய பேட்ரியாட்ஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 2வது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Virat Kohli completes 12 years in International Cricket

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து சேஸிங் செய்த பேட்ரியாட்ஸ் அணி நிதான ஆட்டம் ஆடி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ்

டாஸ்

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் இடையே ஆன போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் அணிக்கு துவக்க வீரர்கள் சார்லஸ் 4, ஹோப் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் டக் அவுட் ஆனார். அந்த அணி 2.3 ஓவர்களில் 8 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.

அதிரடி

அதிரடி

மோசமான நிலையில் இருந்த அணியை மீட்க கேப்டன் ஜேசன் ஹோல்டர் - கைல் மேயர்ஸ் முடிவு செய்தனர். இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். மேயர்ஸ் 20 பந்துகளில் 37 ரன்களும், ஹோல்டர் 22 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர்.

ரஷித் கான்

ரஷித் கான்

அவர்கள் வெளியேறிய பின் மீண்டும் விக்கெட்கள் சரியத் துவங்கின. கார்ட்டர் 0, ரெய்பர் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். சான்ட்னர் 20 ரன்கள் சேர்த்தார். நர்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ரஷித் கான் அணிக்கு கை கொடுத்தார்.

பார்படோஸ் ஸ்கோர்

பார்படோஸ் ஸ்கோர்

ரஷித் கான் 20 பந்துகளில் 26 ரன்கள் சேர்க்க, பார்படோஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. பேட்ரியாட்ஸ் அணியில் காட்ரல் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். எம்ரிட்டும் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

சரியாக பந்து வீச முடியாது

சரியாக பந்து வீச முடியாது

154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் துவங்கியது பேட்ரியாட்ஸ். பார்படோஸ் அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அந்த அணியால் ஈரப்பதமான சூழ்நிலையில் சரியாக பந்து வீச முடியாது என கருதப்பட்டது.

நிதான ரன்

நிதான ரன்

எனினும், பார்படோஸ் கட்டுக்கோப்பாக பந்து வீசியது. பேட்ரியாட்ஸ் அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தது. லீவிஸ் 18 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். கிறிஸ் லின் 19 ரன்கள் எடுத்தார். அதன் பின் டா சில்வா - டங்க் ஜோடி போராடியது.

டா சில்வா நிதானம்

டா சில்வா நிதானம்

டங்க் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். ரம்தின் 13 ரன் எடுத்தார். ஹாமில்டன் டக் அவுட் ஆனார். டா சில்வா நீண்ட நேரம் ஆடினாலும் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் மட்டுமே ரன் சேர்த்து வந்தார்.

சான்ட்னர் அபாரம்

சான்ட்னர் அபாரம்

கடைசி ஓவரில் 20 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் பேட்ரியாட்ஸ் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. பார்படோஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியில் ஆட உள்ள மிட்செல் சான்ட்னர் அபாரமாக பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

Story first published: Wednesday, August 19, 2020, 10:16 [IST]
Other articles published on Aug 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+