Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

28 பந்தில் 72 ரன்.. கடைசி 4 ஓவர்.. பொல்லார்டு வெறியாட்டம்… ஜெயிக்கப் போறோம்னு நம்பி ஏமாந்த பார்படோஸ்

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் தேவை.

கையில் 4 விக்கெட்தான் இருக்கிறது. பொல்லார்டு தவிர நல்ல பேட்ஸ்மேன் யாரும் இல்லை.

எப்படியும் வென்று விடலாம் என கனவு கண்டது பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி. ஆனால், நடந்தது வேறு.

17வது லீக் போட்டி

17வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது லீக் போட்டியில் பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ட்ரின்பாகோ அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கேப்டன் கீரான் பொல்லார்டு தலைமையில் வெற்றிநடை போட்டு வருகிறது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் ட்ரின்பாகோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பார்படோஸ் அணியின் துவக்க வீரர் ஷாய் ஹோப் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் மற்றொரு துவக்க வீரர் சார்லஸ் மற்றும் மேயர்ஸ் இணைந்து ரன் சேர்த்தனர்.

நர்ஸ் - ரஷித் கான்

நர்ஸ் - ரஷித் கான்

சார்லஸ் 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். மேயர்ஸ் 42 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கோரி ஆண்டர்சன் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். நர்ஸ் 19, ரஷித் கான் 12 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், இருவரும் குறைந்த பந்துகளில் அதிரடியாக ரன் சேர்த்ததால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.

பார்படோஸ் ஸ்கோர்

பார்படோஸ் ஸ்கோர்

கடைசியில் சான்ட்னர் ஒரு சிக்ஸ் அடித்தார். 20 ஓவர்களில் பார்படோஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்து இருந்தது. ட்ரின்பாகோ அணியின் ஹோசின் 2, ஸீல்ஸ் 2, அஹ்மத் 1, சிக்கந்தர் ராசா 2 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

149 ரன்கள் இலக்கு

149 ரன்கள் இலக்கு

149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி துரத்தத் துவங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. துவக்க வீரர் சிம்மன்ஸ் மட்டுமே சமாளித்து 29 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

வெப்ஸ்டர் 5, மன்றோ 0, டேரன் பிராவோ 6, செய்பர்ட் 4, ஹோசின் 12 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். பொல்லார்டு - சிக்கந்தர் ராசா களத்தில் இருந்த போது 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது ட்ரின்பாகோ அணி.

17வது ஓவர்

17வது ஓவர்

கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் தேவை. பொல்லார்டு மட்டுமே நல்ல பேட்ஸ்மேன். அந்த நிலையில் பார்படோஸ் அணி நம்பிக்கையுடன் தான் இருந்தது. ஆனால், 17வது ஓவரில் பொல்லார்டு தாண்டவம் ஆடினார். ஹெய்டன் வால்ஷ் வீசிய அந்த ஓவரில் மட்டும் அவர் 4 சிக்ஸ் அடிக்க 25 ரன்கள் சேர்த்தது ட்ரின்பாகோ.

பொல்லார்டு ரன் குவிப்பு

பொல்லார்டு ரன் குவிப்பு

18வது ஓவரில் சிக்கந்தர் ராசா ஆட்டமிழந்தார். பியர்ரே களமிறங்கினார். அவரும் பொல்லார்டுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடினார். 18வது ஓவரில் 10 ரன், 19வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தது ட்ரின்பாகோ. பொல்லார்டு சிக்ஸ் மழை பொழிந்தார்.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் பொல்லார்டு ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பியர்ரே 4வது பந்தில் ஒரு சிக்ஸ் அடிக்க, அதற்கு அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து ட்ரின்பாகோ அணி வெற்றி பெற்றது.

பொல்லார்டு 72 ரன்

பொல்லார்டு 72 ரன்

பொல்லார்டு 28 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இருந்தார். 2 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். பார்படோஸ் அணி பொல்லார்டை கட்டுப்படுத்த தவறி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் தொடர்ந்து ஆறாவது லீக் போட்டி வெற்றியை பெற்றுள்ளது. பொல்லார்டு 28 பந்துகளில் 72 ரன்கள் குவித்து இருந்தார். 2 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். பார்படோஸ் அணி பொல்லார்டை கட்டுப்படுத்த தவறி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் தொடர்ந்து ஆறாவது லீக் போட்டி வெற்றியை பெற்றுள்ளது.

Story first published: Sunday, August 30, 2020, 10:23 [IST]
Other articles published on Aug 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+