Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொப்பி, கூலிங் கிளாஸ்.. கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப் போட்ட வீரர்.. உருகி மருகி பாராட்டிய ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெறும் ஒரு தொப்பி, ஒரு கூலிங் கிளாஸை வைத்து பெரிய, பெரிய பந்துவீச்சாளர்கள் எல்லாம் மாங்கு மாங்கு என்று பந்து வீசி பெற்ற பெயரை ஒரு சின்ன விஷயத்தை செய்து சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் பென் டங்க்.

Recommended Video

Ben Dunk with his floppy hat and shades in CPL 2020

ஆம், 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தன் வட்டமான பிளாப்பி தொப்பியை அணிந்து கொண்டு, கூலிங் கிளாஸையும் போட்டுக் கொண்டு பந்து வீசி விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதுல என்னப்பா இருக்கு?

இதுல என்னப்பா இருக்கு?

இதுல என்னப்பா இருக்கு? என நீங்கள் கேட்கலாம். ஆனால், இதைத் தான் உருகி, மருகி பாராட்டி வருகிறார்கள் சில கிரிக்கெட் ரசிகர்கள். கிரிக்கெட் போட்டிகளில் கூலிங் கிளாஸ் அணிந்து பந்து வீசுபவர்களை கூட நாம் பார்த்து இருக்கிறோம். தொப்பி அணிந்து கொண்டு வீசியதை பார்ப்பது மிகவும் அரிது.

சம்பவம்

சம்பவம்

பென் டங்க் கூலிங் கிளாஸுடன் தொப்பியையும் அணிந்து கொண்டு பந்து வீசியது முதலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பென் டங்க்

பென் டங்க்

அந்த அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் பென் டங்க் தான். அவர் 33 ரன்களை எடுத்து இருந்தார். அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஸோக்ஸ் அணி எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையில், பகுதி நேர பந்துவீச்சாளரான பென் டங்க்-இடம் பந்தை கொடுத்தார் பேட்ரியாட்ஸ் கேப்டன் ரியாத் எம்ரிட்.

ஒரு விக்கெட்

ஒரு விக்கெட்

முதல் ஓவரில் தொப்பி கூலிங் கிளாஸுடன் பந்து வீசி 8 ரன்கள் கொடுத்த அவர், இரண்டாவது ஓவரில் நஜிபுல்லா சத்ரான் விக்கெட்டையும் கைப்பற்றினார். அப்போதே ரசிகர்கள் பலர் தொப்பி, கூலிங் கிளாஸுடன் விக்கெட் வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்றெல்லாம் புகழத் துவங்கி விட்டனர்.

மிகப் பெரிய தருணம்

மிகப் பெரிய தருணம்

சிலர் இந்த ஆண்டு நடந்த அத்தனை சோகங்களையும் அவர் தொப்பியுடன் பந்து வீசியது சமன் செய்து விட்டது என கூறி உள்ளனர். ஒரு கிரிக்கெட் விமர்சகர் இது கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றில் மிகப் பெரிய தருணம் என்றும் கூறி உள்ளார்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

இந்தப் போட்டியில் டங்க் 2.4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். இது மோசமான பந்துவீச்சு தான். ஆனால், ஒரு தொப்பி, ஒரு கூலிங் கிளாஸை வைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் பென் டங்க்.

Story first published: Friday, August 28, 2020, 17:53 [IST]
Other articles published on Aug 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+