Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிபிஎல்-இல் ஆடிவிட்டு.. ஐபிஎல்-இல் கலக்கப் போகும் அந்த ஒரு வீரர் இவர்தான் - பிரெட் லீ

மும்பை : 2020 ஐபிஎல் தொடருக்கு முன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற உள்ளது.

பிரம்மாண்டமான ஐபிஎல் தொடருக்கு ஒரு முன்னோட்டமாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இருக்கும் என கருதப்படுகிறது.

அது மட்டுமின்றி சில வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மற்றும் பிற வெளிநாட்டு வீரர்களுக்கு பயிற்சிக் களமாகவும் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ளது.

சிறப்பாக செயல்படுவார்

சிறப்பாக செயல்படுவார்

அது குறித்த விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பிரெட் லீ குறிப்பிட்ட ஒரு வீரர் கரீபியன் ப்ரீமியர் லீக் மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டிலும் சிறப்பாக செயல்படுவார் என கூறினார். ஐக்கிய அரபு அமீரக பிட்ச்களை அறிந்த வீரர் என்றும் குறிப்பிட்டார்.

கரீபியன் ப்ரீமியர் லீக்

கரீபியன் ப்ரீமியர் லீக்

ஆகஸ்ட் 18 முதல் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் நடக்க உள்ளது. ஐபிஎல் போலவே அந்த தொடரும் கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற உள்ளது. அதற்காக ஆறு அணிகளை சேர்ந்த வீரர்கள் பல முறை கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு தயாராகி உள்ளனர்.

பயிற்சி

பயிற்சி

இந்த தொடரில் ஒவ்வொரு அணியிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்களில் சிலர் ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சரியான பயிற்சி செய்ய முடியாத நிலை இருக்கிறது.

சாதகமான விஷயம்

சாதகமான விஷயம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள அந்த சில வெளிநாட்டு வீரர்கள் அந்த தொடரில் ஆடிய பயிற்சியுடன் ஐபிஎல் தொடரில் ஆடுவது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அந்த வீரர்களில் மூவரை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விவாதம் நடைபெற்றது.

அந்த மூவர்

அந்த மூவர்

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் - ரவுண்டர் ரஷித் கான், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகிய மூவரில் யார் இரு தொடர்களிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற விவாதம் நடைபெற்றது.

பிரெட் லீ தேர்வு இவர்தான்

பிரெட் லீ தேர்வு இவர்தான்

இது குறித்து பேசிய பிரெட் லீ, தான் மூவரையும் தேர்வு செய்ய விரும்பினாலும் ரஷித் கானை மட்டும் தேர்வு செய்வதாக கூறினார். அவரிடம் அனைத்து ட்ரிக்குகளும் இருப்பதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக போட்டிகளில் ஆடி உள்ளதால் அங்கே உள்ள அனைத்து பிட்ச்களும் அவருக்கு அத்துப்படி என்றும் கூறினார்.

Story first published: Wednesday, August 12, 2020, 21:08 [IST]
Other articles published on Aug 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+