Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் அதே நேரத்தில் தான் நாங்களும் ஆரம்பிப்போம்.. அடம் பிடிக்கும் சிபிஎல்!

மும்பை : கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 18 முதல் துவங்க உள்ளது.

Recommended Video

ஐபிஎல் 2020: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புது விளம்பரதாரர்

ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்க உள்ள இந்த தொடர் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் அதே நேரத்தில் துவங்கி நடைபெற உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் பிரதேசத்தில் நடக்கும் அந்த டி20 தொடரில் பாதி அளவு போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளது. ஆறு அணிகள் பங்கேற்க உள்ள இந்த தொடரில் 33 போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றில் தினமும் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

உள்ளூர் ரசிகர்கள் ஆச்சரியம்

உள்ளூர் ரசிகர்கள் ஆச்சரியம்

லீக் சுற்றின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் இரவு நேரப் போட்டிகளும் 7.30 மணிக்கு தான் துவங்கும். சிபிஎல் போட்டி நடக்க உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் அப்போது காலை 10 மணி. காலை நேரத்தில் டி20 போட்டியா? என உள்ளூர் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

அதற்கு முக்கிய காரணம் இந்திய ரசிகர்கள் தான். ஆம், கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலையில் ஒளிபரப்ப உள்ளது. அதன் காரணமாக அந்த தொடரில் ஒவ்வொரு நாளும் முதல் போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

தினமும் இரண்டாவது லீக் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். போர்ட் ஆஃப் ஸ்பெயின் நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி நடைபெறும். செப்டம்பர் 10 அன்று இந்த தொடர் முடிவடையும் நிலையில் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது.

Story first published: Saturday, August 15, 2020, 18:32 [IST]
Other articles published on Aug 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+