Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நேரா ஐபிஎல்-லுக்கு தான் வருவோம்.. இந்த 3 சிஎஸ்கே வீரர்கள் மட்டும் ஸ்பெஷல்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 ஐபிஎல் தொடருக்கு அனைத்து ஐபிஎல் அணிகளும் தயார் ஆகி வருகின்றன.

Recommended Video

Dhoni To Join Politics? | BJP Lok Sabha Election Offer | Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தி விட்டு பின் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளது.

அங்கே மூன்று வார பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. அதில் மூன்று சிஎஸ்கே அணி வீரர்கள மட்டும் பங்கேற்கப் போவதில்லை.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி இன்றி இருந்ததால் ஐபிஎல் தொடருக்கு முன் அதிக பயிற்சி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

சிஎஸ்கே அணி சென்னையில் ஆறு நாட்கள் பயிற்சி முகாமும், ஐக்கிய அரபு அமீரகத்தில் குறைந்தது மூன்று வார பயிற்சி முகாமும் நடத்த உள்ளது. இந்திய வீரர்கள் சென்னை முகாமில் பங்கேற்பார்கள். வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வந்து அங்கே இணைந்து கொள்வார்கள்.

சிஎஸ்கே வீரர்கள்

சிஎஸ்கே வீரர்கள்

இதில் மூன்று வீரர்கள் மட்டும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ஆட உள்ளதால் சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்து கொள்ளப் போவதில்லை. அவர்கள் செப்டம்பர் 10க்கு பின் ஐக்கிய அரபு அமீரகம் வந்து சிஎஸ்கே அணியுடன் இணைய உள்ளனர்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளது. அந்த தொடரின் சிஎஸ்கே அணியின் இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் மற்றும் டிவைன் பிராவோ கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் தான் சிஎஸ்கே அணியில் தாமதமாக இணைய உள்ளனர்.

ஐபிஎல் வீரர்கள்

ஐபிஎல் வீரர்கள்

அதே போல மற்ற ஐபிஎல் அணிகளிலும் சில வீரர்கள் இந்த தொடரில் ஆட உள்ளதால் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளப் போவதில்லை. கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட உள்ள அந்த ஐபிஎல் வீரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிபிஎல்-இல் ஆடும் ஐபிஎல் வீரர்கள்

சிபிஎல்-இல் ஆடும் ஐபிஎல் வீரர்கள்

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஆண்ட்ரே ரஸ்ஸல், க்ரீன், சுனில் நரைன்
  • டெல்லி கேபிடல்ஸ் - சந்தீப் லாமிச்சேன், ஷிம்ரான் ஹெட்மையர், கீமோ பால்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - ஓஷேன் தாமஸ்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முகமது நபி, ரஷித் கான்
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் - நிக்கோலஸ் பூரன், காட்ரேல், முஜீப் உர் ரஹ்மான்
  • மும்பை இந்தியன்ஸ் - ரூதர்போர்டு, கிறிஸ் லின், கீரான் பொல்லார்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - இம்ரான் தாஹிர், மிட்செல் சான்டனர், டிவைன் பிராவோ
Story first published: Monday, August 17, 2020, 19:54 [IST]
Other articles published on Aug 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+