For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த வீரரும் செய்யாத மாபெரும் உலக சாதனை.. டி20யில் வரலாறு படைத்த சிஎஸ்கே வீரர் பிராவோ

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : டிவைன் பிராவோ டி20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் பிராவோ 500 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரைத் தவிர ஒருவரும் 400 விக்கெட்கள் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை தொடாத புதிய உயரத்தை தொட்டு வியக்க வைத்துள்ளார் பிராவோ.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவிர்த்து பிற நாட்டு வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

பிராவோ பங்கேற்பு

பிராவோ பங்கேற்பு

அந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பங்கேற்றார் ஆல் - ரவுண்டரான டிவைன் பிராவோ.

பிராவோ குறித்து கவலை

பிராவோ குறித்து கவலை

இந்த தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் பிராவோ 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார். ரன்களையும் வாரி இறைத்து இருந்தார். அதனால் ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலையில் இருந்தனர். அடுத்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவர் ஆட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

500வது விக்கெட்

500வது விக்கெட்

இந்த நிலையில் செயின்ட் லூசியா அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ சிறப்பாக பந்து வீசினார். தான் வீசிய முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அது அவரது 500வது டி20 போட்டி விக்கெட் ஆகும்.

100வது விக்கெட்

100வது விக்கெட்

அவரது இரண்டாவது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவரது 500வது டி20 விக்கெட், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அவரது 100வது விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

50வது விக்கெட்

50வது விக்கெட்

அது மட்டுமின்றி, பிராவோ வீழ்த்திய இரண்டாவது விக்கெட் போட்டி நடைபெற்ற போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் அவரது 50வது விக்கெட் ஆகும். அவரது 500 டி20 விக்கெட்கள் சாதனை ரசிகர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 500 விக்கெட்கள் வீழ்த்தி மைல்கல் சாதனை படைத்துள்ளார் பிராவோ. தற்போது பிராவோ தான் டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருக்கிறார்.

அதிக டி20 விக்கெட்கள்

அதிக டி20 விக்கெட்கள்

யாரும் தொடாத உச்சத்தை தொட்டு அதிக டி20 விக்கெட்கள் வீழ்த்திய பட்டியலில் பிராவோ முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து அதிக டி20 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள வீரர் லசித் மலிங்கா. அவர் 390 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். சுனில் நரைன் 383 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் விக்கெட்கள்

ஐபிஎல் விக்கெட்கள்

459 டி20 போட்டிகளில் 440 இன்னிங்க்ஸ்களில் பிராவோ 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் 71 சர்வதேச டி20 போட்டிகளில் 59 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 134 ஐபிஎல் போட்டிகளில் 147 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 101 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இது தவிர உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் அவர் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 26, 2020, 22:11 [IST]
Other articles published on Aug 26, 2020
English summary
CPL 2020 : Dwayne Bravo took 500 T20 wickets and achieves new milestone record. Except him, no one crossed 400 wickets in T20 matches yet.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+