Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் துருப்புச்சீட்டு.. ஐபிஎல்-லுக்கு வரும் முன் முழுசா தயாராகப் போகும் ஒரே சிஎஸ்கே வீரர்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ள வீரர்கள் பலர் சரியாக தொடருக்கு முழுமையாக தயாராக முடியாத நிலையில் உள்ளனர்.

Recommended Video

சென்னையில் CSK பயிற்சி.. வேற லெவல் ஏற்பாடு | Oneindia Tamil

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் துருப்புச்சீட்டு வீரராக அறியப்படும் டிவைன் பிராவோ முழுமையாக தயாராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

2020 கரிபீயன் பிரீமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள அவர் அந்த தொடரின் ஆடி முடித்த உடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று துவங்க உள்ளது. இந்திய வீரர்கள் கடந்த சில மாதங்களாக பயிற்சி இன்றி இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி தங்கள் அணி வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க முயன்று வருகிறது. எனினும், மூன்று அல்லது நான்கு வாரங்கள் மட்டுமே ஐபிஎல் தொடருக்கு முன் பயிற்சி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

தயாராக முடியாது

தயாராக முடியாது

அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆகஸ்ட் 20க்கு பின்னர் தான் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பிச் செல்ல உள்ளன. அதனால், எந்த அணியும் முழுமையாக தயாராக முடியாது என்ற நிலையே உள்ளது. இந்த நிலையில் பிராவோ உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடர் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

டிவைன் பிராவோ

டிவைன் பிராவோ

சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல் - ரவுண்டர் டிவைன் பிராவோ தான். எப்போதும் கடைசி ஓவர்களை பிராவோவிடம் தான் கொடுப்பார் தோனி. பேட்டிங்கிலும் சரியான நேரத்தில் கை கொடுப்பார் பிராவோ. கடந்த ஆண்டில் பிராவோ டி20 லீக் போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தார்.

பயிற்சி

பயிற்சி

அவருக்கும் பயிற்சி தேவைப்பட்ட நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட உள்ளார். அந்த தொடர் முடிந்த உடன் நேரடியாக ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க இருக்கிறார். அவரைப் போன்றே கீரான் பொல்லார்டு, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் உள்ளிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அந்த தொடரின் பயிற்சியுடன் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

Story first published: Sunday, August 9, 2020, 19:43 [IST]
Other articles published on Aug 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+