Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CPL 2020 : இருந்த ஒரே ஃபிளைட்டையும் தவறவிட்ட வீரர்.. ஆள் இல்லாமல் தவிக்கும் டீம்

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் கடும் கட்டுப்பாடுகளுடன் திட்டமிட்டு நடத்தப்பட உள்ளது.

அந்த தொடரில் பங்கேற்க இருந்த பாபியன் ஆலன் தனி விமானத்தை தவற விட்டதால் அந்த தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.

கடைசி நேரத்தில் இந்த குழப்பம் நடந்ததால் அவர் பங்கேற்று இருந்த செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி மாற்று வீரரை தேர்வு செய்ய முடியாமல் சிக்கியது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ளது. ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 10 வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களை ஒன்று திரட்டி இரு வாரங்கள் முன்பு இருந்தே தனிமைப்படுத்தும் பணி துவங்கி உள்ளது.

தனி விமானங்கள்

தனி விமானங்கள்

இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த ஆறு அணிகளில் பங்கேற்க உள்ள வீரர்களையும் ட்ரினிடாட் அண்ட் டோபாகோ நாட்டிற்கு அழைத்துச் செல்ல தனி விமானங்களை தயார் செய்து இருந்தது தொடர் நிர்வாகம்.

பாபியன் ஆலன்

பாபியன் ஆலன்

இந்த நிலையில், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பாபியன் ஆலன் ஜமைக்காவில் இருந்து பார்படோஸ் செல்ல இருந்த விமானத்தை தவறவிட்டார்.

செல்ல முடியாத நிலை

செல்ல முடியாத நிலை

பார்படோஸ்-இல் இருந்து ட்ரினிடாட் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த விமானத்தையும் தவறவிட்டார். ட்ரினிடாட் செல்ல விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் ஆலன் அங்கே செல்ல வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டது.

பேட்ரியாட்ஸ் அணி சிக்கல்

பேட்ரியாட்ஸ் அணி சிக்கல்

அவர் இனி இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட முடியாது. பேட்ரியாட்ஸ் அணியில் ஏற்கனவே பயிற்சியாளர் மற்றும் சிலர் பல்வேறு காரணங்களால் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் ஆலனும் ஆட முடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக மாறி உள்ளது.

இவர்களும் வரவில்லை

இவர்களும் வரவில்லை

தென்னாப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன், ஆப்கானிஸ்தான் வீரர்கள் கயாஸ் அஹ்மது, ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் அஹ்மத் ஆகியோரும் விசா, விமான சேவை கிடைக்காதது போன்ற காரணங்களால் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

Story first published: Saturday, August 8, 2020, 18:41 [IST]
Other articles published on Aug 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+