Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. ஈவு இரக்கமே இல்லாமல் 5வது ஓவரில் சேஸிங்கை முடித்த செயின்ட் லூசியா.. தரமான சம்பவம்!

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி.

அரை இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பை கூட கொடுக்காமல் துவக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தி வென்றது செயின்ட் லூசியா.

அரை இறுதிப் போட்டி

அரை இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி அரை இறுதிப் போட்டியில் மோதின. கயானா அணி கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று இருந்தது.

டக் அவுட்

டக் அவுட்

இந்த நிலையில், டாஸ் வென்ற செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் கயானா அணியின் துவக்க வீரர் பிரான்டன் கிங் மற்றும் அடுத்து வந்த ஷிம்ரான் ஹெட்மயர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

மீளவே இல்லை

மீளவே இல்லை

ரன்னே எடுக்காமல் 2 விக்கெட்களை இழந்து இருந்த கயானா அணி அதன் பின் அந்த அடியில் இருந்து மீளவே இல்லை. நிக்கோலஸ் பூரன் 11, ராஸ் டெய்லர் 3, கீமோ பால் 2, கிரிஸ் க்ரீன் 11, சந்தர்பால் ஹேம்ராஜ் 25, சின்கிளேர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

55 ரன்

55 ரன்

பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் இம்ரான் தாஹிர் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 13.4 ஓவர்களில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

செயின்ட் லூசியா அணியின் பந்துவீச்சில் குகெலெய்ஜின் 2, முகமது நபி 1, ராஸ்டன் சேஸ் 2, ஜாகிர் ஜான் 2, ஜாவேல் கிளென் 1, டெயால் 2 விக்கெட்களை அள்ளினர். அதிலும் டெயால் ஒரு ஓவர் மட்டுமே வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

கயானா ஏமாற்றம் அடைந்தது

கயானா ஏமாற்றம் அடைந்தது

56 ரன்கள் என்ற சிறிய இலக்கை சேஸ் செய்த செயின்ட் லூசியா அணி எப்படியும் ஜெயிக்கும் என்றாலும், எங்கேயாவது சறுக்கும் என எதிர்பார்த்த கயானா அணி அதிலும் ஏமாற்றம் அடைந்தது. செயின்ட் லூசியா அணி இரக்கமே இல்லாமல் சேஸிங் செய்தது.

அதிரடி சேஸிங்

அதிரடி சேஸிங்

அந்த அணியின் துவக்க வீரர்கள் கார்ன்வால் மற்றும் மார்க் டெயால் விக்கெட் இழக்காமல் 4.3 ஓவரில் சேஸிங்கை முடித்தனர். கார்ன்வால் 17 பந்துகளில் 32 ரன்களும், மார்க் டெயால் 10 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து இருந்தனர்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2 விக்கெட் வீழ்த்தி, அதிரடியாக 19 ரன்கள் குவித்த டெயால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றி மூலம் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்க உள்ளது செயின்ட் லூசியா.

Story first published: Wednesday, September 9, 2020, 13:00 [IST]
Other articles published on Sep 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+