Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த ஸ்கோருக்கெல்லாம் எனர்ஜியை வேஸ்ட் பண்ண முடியாது.. நின்று நிதானமாக சேஸ் செய்த நைட் ரைடர்ஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

Recommended Video

CPL 2020 Match 13 STZ VS TKR ; Trinbago won by 6 wickets | OneIndia Tamil

இந்தப் போட்டியில் அமேசான் வாரியர்ஸ் அணி 112 ரன்களே எடுத்தது. அதை சேஸிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி நிறுத்தி நிதானமாக சேஸிங் செய்து வென்றது.

16வது லீக் போட்டி

16வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 16வது லீக் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை சந்தித்தது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பந்துவீசும் அணிக்கே போர்ட் ஆஃப் ஸ்பெயின் ஆடுகளத்தில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடந்து வருவதால் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி உள்ளதே அதற்கு காரணம்.

விக்கெட் இழப்பு

விக்கெட் இழப்பு

கயானா அமேசான் வாரியர்ஸ் அணி துவக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து வந்தது. துவக்க வீரர்கள் பிரான்டன் கிங் 6, ஹேம்ராஜ் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஹெட்மயர், ராஸ் டெய்லர் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினர்.

குறைவான ஸ்கோர்

குறைவான ஸ்கோர்

ஹெட்மயர் 26, ராஸ் டெய்லர் 26 ரன்கள் எடுத்தனர். ரூதர்போர்டு 6, ஷெப்பர்டு 11 ரன்கள் எடுத்தனர். கீமோ பால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சேஸிங்

சேஸிங்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பியர்ரே 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அடுத்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர்கள் சிம்மன்ஸ், வெப்ஸ்டர் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

சிம்மன்ஸ் 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். வெப்ஸ்டர் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மன்றோ டக் அவுட் ஆனார். 10.2 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 52 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது நைட் ரைடர்ஸ் அணி. பின் டேரன் பிராவோ மற்றும் செய்பர்ட் இணைந்து ஆடினர்.

பிராவோ - செய்பர்ட் ஜோடி

பிராவோ - செய்பர்ட் ஜோடி

பிராவோ - செய்பர்ட் ஜோடி இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தது. பிராவோ 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நிதான ஆட்டம் ஆட, செய்பர்ட் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நைட் ரைடர்ஸ் வெற்றி

நைட் ரைடர்ஸ் வெற்றி

நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இது நைட் ரைடர்ஸ் அணியின் ஐந்தாவது வெற்றி ஆகும். 3 விக்கெட்கள் வீழ்த்திய பியர்ரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Story first published: Friday, August 28, 2020, 17:57 [IST]
Other articles published on Aug 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+