Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பேசாம நாங்க டெஸ்ட் மேட்ச்சே பாத்துக்குறோம்.. ரசிகர்களை கடுப்பேற்றிய டி20 போட்டி!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் தான் கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

Recommended Video

CPL 2020 SNP VS BT Patriots won by 6 wickets | Oneindia Tamil

இந்தியாவில் கூட இந்த ஆண்டு நேரலை ஒளிபரப்பு துவங்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தலவாஸ் போட்டியில் இரு அணி வீரர்களும் ஆடி அசைந்து ரன் சேர்த்தனர்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆறு அணிகள் மோதி வருகின்றன. லீக் சுற்றுப் போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வருகிறது.

கயானா அணி மோசம்

கயானா அணி மோசம்

இதில் 12வது லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. ஜமைக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கயானா அணி மிக மோசமாக சொதப்பியது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

துவக்க வீரர் பிரான்டன் கிங் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். பிராம்பிள் 19 பந்துகளில் சாவகசமாக 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹெட்மயர் 5, ராஸ் டெய்லர் 23, பூரன் 15, ரூதர்போர்டு 1 ரன் மட்டுமே எடுத்தனர். மோசமான விக்கெட் வீழ்ச்சியால் தத்தளித்தது கயானா அணி.

108 ரன்கள்

108 ரன்கள்

எப்போதும் அதிரடி ஆட்டம் ஆடி கை கொடுக்கும் பந்துவீச்சாளர் கீமோ பால் இந்த முறை 20 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். க்ரீன் 2, நவீன் உல் ஹக் 20, இம்ரான் தாஹிர் 9 ரன்கள் எடுத்தனர். கயானா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்

முஜீப் உர் ரஹ்மான் அசத்தல்

ஜமைக்கா அணியின் சுழற் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பிடெல் எட்வர்ட்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். ரஸ்ஸல், லாமிச்சேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஜமைக்கா நிதானம்

ஜமைக்கா நிதானம்

109 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய ஜமைக்கா அணியும் நிதானமாகவே ஆடியது. பிலிப்ஸ் 18 பந்துகளில் 26, பிளாக்வுட் 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தனர். வால்டன் 1, ஆசிப் அலி 3, போவெல் 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வெற்றி

வெற்றி

போன்னர் 30, ரஸ்ஸல் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்று தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர். ஜமைக்கா அணி 18 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக பந்து வீசிய முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இரண்டு அணிகளும் 38 ஓவர்கள் ஆடி 221 ரன்கள் மட்டுமே எடுத்தன. அதிலும் கயானா அணி டெஸ்ட் போட்டி போல ஆடியதை கண்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இது டெஸ்ட் போட்டியா? இல்லை டி20யா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

Story first published: Wednesday, August 26, 2020, 18:44 [IST]
Other articles published on Aug 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+