Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த டீமை யாராலும் காப்பாத்த முடியாது.. ரஸ்ஸல் அதிரடி வேஸ்ட்.. கடுப்பான ரசிகர்கள்!

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தன் ஏழாவது லீக் போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்துள்ளது.

Recommended Video

CSK வீரர்களுக்கு September 4 முதல் பயிற்சி - CEO அறிவிப்பு

ஜமைக்கா தலவாஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி அரைசதம் அடித்தாலும் அந்த அணி நிதான ஆட்டம் ஆடியதால் தோல்வி அடைந்தது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 21வது லீக் சுற்றுப் போட்டி ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அபார துவக்கம்

அபார துவக்கம்

ட்ரின்பாகோ அணிக்கு சிம்மன்ஸ் - நரைன் மீண்டும் அபார துவக்கம் அளித்தனர். சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 2.3 ஓவரில் 32 ரன்களை எட்டியது. அதற்கு அடுத்த பந்தில் நரைன் 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பொல்லார்டு சிக்ஸ்

பொல்லார்டு சிக்ஸ்

சிம்மன்ஸ் 28 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கோலின் மன்றோ அதிரடி ஆட்டம் ஆடி 65 ரன்கள் குவித்தார். 10 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து இருந்தார் அவர். செய்ஃபர்ட் 18 ரன்கள் எடுத்தார். கேப்டன் பொல்லார்டு கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

பெரிய இலக்கு

பெரிய இலக்கு

பொல்லார்டு 16 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். 1 ஃபோர், 3 சிக்ஸ் ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அடுத்து இந்த பெரிய இலக்கை துரத்திய ஜமைக்கா அணியில் துவக்க வீரர் பிலிப்ஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

பிலிப்ஸ் 31 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். வால்டன் 0, பிளாக்வுட் 12, போன்னர் 30 பந்துகளில் 26, போவெல் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 13.3 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து 5 விக்கெட்களை இழந்தது ஜமைக்கா அணி.

ஓவருக்கு 18 ரன்கள் தேவை

ஓவருக்கு 18 ரன்கள் தேவை

அதிரடி மன்னன் ரஸ்ஸல் களமிறங்கிய போது ஜமைக்கா அணியின் வெற்றிக்கு 35 பந்துகளில் 88 ரன்கள் தேவையாக இருந்தது. 15 ஓவர்கள் முடிவில் ஓவருக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற மோசமான நிலையில் இருந்த அந்த அணி.

23 பந்துகளில் 50 ரன்கள்

23 பந்துகளில் 50 ரன்கள்

ரஸ்ஸல் தன் அதிரடி ஆட்டத்தால் 23 பந்துகளில் 50 ரன்கள் குவித்தாலும் ஜமைக்கா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜமைக்கா அணியின் பேட்டிங் மோசமாக இருப்பதே அந்த அணியின் தோல்விகளுக்கு காரணம்.

ஏழாவது வெற்றி

ஏழாவது வெற்றி

ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் ஆடியும் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து தன் ஏழாவது வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

Story first published: Wednesday, September 2, 2020, 19:39 [IST]
Other articles published on Sep 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+