Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 சிக்ஸ் அடித்த ரஸ்ஸல் ஆட்டம் வேஸ்ட்.. சிஎஸ்கே வீரரின் மேஜிக்.. சரண்டர் ஆன ஜமைக்கா!

டரூபா : ஜமைக்கா தலவாஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் ஆடியும் அந்த அணி தோல்வி அடைந்தது.

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மிட்செல் சான்ட்னர், பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

28வது லீக் போட்டி

28வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 28வது லீக் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் - பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிகள் மோதின. பார்படோஸ் அணி அரை இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் நோக்குடன் இந்தப் போட்டியில் ஆடியது.

அரை இறுதி வாய்ப்பு

அரை இறுதி வாய்ப்பு

ஜமைக்கா தலவாஸ் அணி சுமாராகவே ஆடி வந்தாலும், ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை நான்காவது அணியாக உறுதி செய்து இருந்தது. இந்த நிலையில், இந்த லீக் போட்டி துவங்கியது. ஜமைக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஜெர்மைன் பிளாக்வுட் ரன் குவிப்பு

ஜெர்மைன் பிளாக்வுட் ரன் குவிப்பு

ஜமைக்கா அணியின் ஜெர்மைன் பிளாக்வுட் அதிரடி ஆட்டம் ஆடினார். பிலிப்ஸ் 17, ஆசிப் அலி 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் மிரட்டலாக ஆடினார். பிளாக்வுட் 59 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்

ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி ஆட்டம்

ஆண்ட்ரே ரஸ்ஸல் அபார ஆட்டம் ஆடி 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அவர் 4 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து இருந்தார். போவெல் 5 ரன்கள் எடுத்தும், பிராத்வைட் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் ஜமைக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து இருந்தது.

மிட்செல் சான்ட்னர் சிக்கனம்

மிட்செல் சான்ட்னர் சிக்கனம்

பார்படோஸ் அணியின் மிட்செல் சான்ட்னர் 3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் 7, 8 முதல் 10 ரன்களுக்கும் மேல் வாரிக் கொடுத்த நிலையில், சான்ட்னர் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் சிறப்பாக வீசி இருந்தார்.

சார்லஸ் டக் அவுட்

சார்லஸ் டக் அவுட்

அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பார்படோஸ் அணிக்கு துவக்க வீரர் சார்லஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ப்ரூக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.

மிட்செல் சான்ட்னர் அதிரடி

மிட்செல் சான்ட்னர் அதிரடி

அடுத்து மிட்செல் சான்ட்னர் ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார். 21 பந்துகளில் அவர் 35 ரன்கள் சேர்த்தார். துவக்க வீரர் கார்ட்டர் 44 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, ஹோல்டர், சான்ட்னர் ஆகியோருக்கு ஒத்துழைப்பு அளித்து இருந்தார்.

பார்படோஸ் வெற்றி

பார்படோஸ் வெற்றி

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பார்படோஸ் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. ஜமைக்கா அணியில் ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் ஆடினாலும், பந்துவீச்சு மோசமாக இருப்பதால் அந்த அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தது.

Story first published: Sunday, September 6, 2020, 12:26 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+