Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவர் அம்பி மாதிரி இருப்போம்.. அப்புறம் வேற மாதிரி.. ஜமைக்கா மிரட்டல் அடி.. மிரண்டு போன லூசியா!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : ஜமைக்கா தலவாஸ் அணி சேஸிங்கில் மெதுவாக ஆடத் துவங்கி பின் மின்னல் வேகத்தில் ஆடி இலக்கை எட்டியது.

Recommended Video

CPL 2020 Match 3 | JT vs SLZ | Jamaica Tallawahs won by 5 wkts

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது லீக் போட்டி ஜமைக்கா தலவாஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ், அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ஜமைக்கா அணி அட்டகாசமாக செயல்பட்டு 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 18 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முதல் நாள் இரண்டு போட்டிகள் நடந்தன. மூன்றாவது லீக் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

இந்தப் போட்டியில் ஜமைக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. டேரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தாது. அந்த அணியின் பேட்டிங் வரிசை பலம் குறைந்து இருந்தது.

லூசியா பேட்டிங்

லூசியா பேட்டிங்

லூசியா அணிக்கு கார்ன்வால் - பிளட்சர் துவக்கம் அளித்தனர். கார்ன்வால் 9 ரன்களில் வெளியேறினார். பிளட்சர் நிதானமாக ஆடத் துவங்கி வேகம் எடுத்தார். பிளட்சர் 22, டெயால் 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தனர். ராஸ்டன் சேஸ் பொறுப்பாக் ஆடி 52 ரன்கள் சேர்த்தார்.

லூசியா ஸ்கோர்

லூசியா ஸ்கோர்

லூசியா அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் சேர்த்து இருந்தது. ஜமைக்கா அணிக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் 4 ஓவர்களில் அந்த அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. சாட்விக் வால்டன் 9 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்தார்.

ரஸ்ஸல் ஏமாற்றம்

ரஸ்ஸல் ஏமாற்றம்

கிர்ட்டன் 1 ரன் மட்டுமே எடுத்தார். கேப்டன் ரோவ்மன் போவெல் 17 பந்துகளில் 26,, பிலிப்ஸ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

ஆசிப் அலி அதிரடி

ஆசிப் அலி அதிரடி

பிலிப்ஸ் - போவெல் விட்ட இடத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை துவங்கினார் ஆசிப் அலி. அவருக்கு கடைசி நேரத்தில் பிராத்வைட் ஒத்துழைப்பு அளித்தார். ஆசிப் அலி 27 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். ஜமைக்கா அணி 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

முதல் 4 ஓவர்

முதல் 4 ஓவர்

ஒரு கட்டத்தில் 4 ஓவர்களுக்கு 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த ஜமைக்கா அணி, கடைசி 10 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்து வந்தது. அதன் காரணமாக இந்த சேஸிங்கை எளிதாக மாற்றி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, August 20, 2020, 0:05 [IST]
Other articles published on Aug 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+