
கரீபியன் பிரீமியர் லீக்
2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் மோதும் இந்த டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் ஜமைக்கா தலவாஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின.

வீராசாமி பெருமாள்
ஜமைக்கா அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஸோக்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடியது. ஜமைக்கா அணியின் சுழற் பந்துவீச்சாளரான வீராசாமி பெருமாள் முதல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அணிக்கு திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தார்.

பாராட்ட முடியாத நிலை
கார்ன்வால் 9, டெயால் 17 ரன்கள் எடுத்து அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அவர் இரண்டு விக்கெட் வீழ்த்தினாலும் அவரை பாராட்ட முடியாத நிலையே இருந்தது. காரணம், அவர் ரன்களை வாரி இறைத்தது தான்.

குறி வைத்து அடித்த பிளட்சர்
துவக்க வீரர் பிளட்சர் அவரது பந்துவீச்சை குறி வைத்து தாக்கினார். டெயால் அவர் வீசிய நான்காவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்து அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கார்ன்வால் 2வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

34 ரன்கள்
இந்த இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி அணிக்கு திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்தாலும், அவர் 3 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து இருந்தார். ஓவருக்கு சராசரியாக 11.33 ரன்கள் கொடுத்து இருந்ததால் அவருக்கு நான்காவது ஓவரை அளிக்கவில்லை ஜமைக்கா அணி கேப்டன் பாவெல்.

லூசியா ரன் குவிப்பு
செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் குவித்தது. 3 ஓவர்கள் மட்டுமே வீசினாலும், 4 ஓவர்கள் வீசிய மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிக ரன்கள் கொடுத்து இருந்தார் வீராசாமி பெருமாள். லூசியா அணியின் ராஸ்டன் சேஸ் 52, நஜிபுல்லா 25, பிளட்சர் 22 ரன்கள் எடுத்தனர்.


Click it and Unblock the Notifications











