Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஓவரில் 5 விக்கெட்.. அதில் 15 டாட் பால்.. தெறிக்கவிட்ட சீனியர் வீரர்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : மூத்த ஆப்கன் வீரரான முகமது நபி கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலாக பந்து வீசினார்.

செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்காக ஆடி வரும் முகமது நபி 4 ஓவர்களில் 5 விக்கெட்கள் வீழ்த்தி மிரள வைத்தார். ரசிகர்கள் அவரது விக்கெட் வேட்டையை கண்டு வியந்தனர்.

லீக் போட்டி

லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 15வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின.

சுழற் பந்துவீச்சுக்கு சாதகம்

சுழற் பந்துவீச்சுக்கு சாதகம்

ஒரே ஆடுகளத்தில் இந்த தொடர் நடைபெற்று வருவதால் ஆடுகளம் சேதம் அடைந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி இருந்தது. இந்த நிலையில், டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது செயின்ட் லூசியா அணி. அனுபவ சுழற் பந்துவீச்சாளரான முகமது நபி முதல் ஓவரை வீசினார்.

4 விக்கெட்கள்

4 விக்கெட்கள்

அவரது பந்துவீச்சில் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் கிறிஸ் லின், ஐந்தாவது பந்தில் நிக் கெல்லி ஆட்டமிழந்தனர். அடுத்து போட்டியின் 3வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் நபி பந்துவீச்சில் தினேஷ் ரம்தின் மற்றும் ஈவின் லீவிஸ் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

பேட்ரியாட்ஸ் பரிதாபம்

பேட்ரியாட்ஸ் பரிதாபம்

11 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து பேட்ரியாட்ஸ் அணி பரிதாபமாக காட்சி அளித்தது. அடுத்து ஹாமில்டன் 9 ரன்கள் எடுத்த நிலையில் மற்றொரு இளம் ஆப்கன் சுழற் பந்துவீச்சாளரான ஜாகிர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஐந்து விக்கெட்

ஐந்து விக்கெட்

பென் டங்க் 33, ரியாத் எம்ரிட் 16, சோஹைல் தன்வீர் 12, அல்சாரி ஜோசப் 21* ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் பேட்ரியாட்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. முகமது நபி தன்வீர் விக்கெட்டையும் வீழ்த்தி தன் 5வது விக்கெட்டையும் கைப்பற்றினார்.

15 டாட் பால்

15 டாட் பால்

முகமது நபி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பால்களும் அடக்கம். தன் அனுபவத்தை முழுவதுமாக வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார் முகமது நபி.

குறைவான ரன்கள்

குறைவான ரன்கள்

செயின்ட் லூசியா அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஸோக்ஸ் அணியில் அதிக ரன்கள் கொடுத்து இருந்தனர். நபியுடன், ஜாகிர் கான், கார்ன்வால், டெயால் ஆகியோரும் ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக மட்டுமே ரன்கள் கொடுத்து இருந்தனர்.

Story first published: Thursday, August 27, 2020, 23:18 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+