Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45 பந்துகள்... 100 ரன்கள்... நிகோலஸ் பூரன் அதிரடி.. சிபிஎல் 2020 தொடரின் முதல் சதம்

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் சிபிஎல் 2020 தொடரில் குயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் கிட்ஸ் & பாட்ரியாட்சை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டியில் ஆடிய குயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரர் நிகோலஸ் பூரன், டி20 மற்றும் இந்த தொடரில் தன்னுடைய முதல் சதத்தை அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் பாட்ரியாஸ் அணயின் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

10ம் தேதி இறுதிப்போட்டி

10ம் தேதி இறுதிப்போட்டி

மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் 2020 தொடர் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் 10ம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு பெரிய அளவில் நடைபெற்றுவரும் டி20 தொடர் இது.

நிகோலஸ் பூரன் சதம்

நிகோலஸ் பூரன் சதம்

இந்த தொடரில் குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & பாட்ரியாட்ஸ் இடையில் நடைபெற்ற போட்டியில் அமேசான் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. அணியின் வீரர் நிகோலஸ் பூரன் அடித்த சதம் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறும் பாட்ரியாட்ஸ் அணியின் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள்

3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள்

அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் கிறிஸ் கிரீன் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், போட்டியில் 6வது பந்திலேயே எதிரணியின் கீரன் பவலின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். ஆயினும் சமாளித்து ஆடிய பாட்ரியாட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களுடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

தூக்கி நிறுத்திய பூரன்& டெய்லர்

தூக்கி நிறுத்திய பூரன்& டெய்லர்

இதையடுத்து ஆடத்துவங்கிய அமேசான் அணி, சொற்ப ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் களமிறங்கிய பூரன் மற்றும் டெய்லர் அணியை தூக்கி நிறுத்தினர். அணியின் வீரர் பூரன் 45 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரின் முதல் சதம் இது. மேலும் சிபிஎல்லின் வேகமான 3வது சதம் மற்றும் டி20 போட்டிகளில் பூரன் அடித்துள்ள முதல் சதம் இது.

Story first published: Monday, August 31, 2020, 12:57 [IST]
Other articles published on Aug 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+