Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட யாருப்பா இது? 48 வயது இந்திய வீரர்.. வந்தவுடன் விக்கெட்.. வாயைப் பிளந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 48 வயது வீரர் பிரவீன் டாம்பே அறிமுகம் ஆனார்.

Recommended Video

Pravin Tambe becomes first Indian player to play in CPL | OneIndia Tamil

மேலும், அந்த டி20 லீக் தொடரில் ஆடும் முதல் இந்திய வீரர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வந்த உடன் முதல் ஓவரிலேயே விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்.

பரபரப்பாக பேசப்பட்டது

பரபரப்பாக பேசப்பட்டது

பிரவின் டாம்பே 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டதே அவர் குறித்த பரபரப்பாக பேசப்பட்டது. 48 வயது வீரரான அவரை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தேர்வு செய்து இருந்தது. அவர் ஏற்கனே ஐபிஎல் தொடரில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் இல்லாத வீரர்

அனுபவம் இல்லாத வீரர்

கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த பிரவீன் டாம்பே உள்ளூர் முதல்தர அல்லது லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாத வீரர். அவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். அவரது 41வது வயதில் தான் அவர் அறிமுகம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் ஆட்டம்

ஐபிஎல் ஆட்டம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் அடி உள்ளார். இடையே ஐபிஎல் வாய்ப்புக்கள் இன்றி இருந்தார். இனி அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட மாட்டார் என கருதப்பட்ட நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்கியது.

வாய்ப்பு மறுக்கப்பட்டது

வாய்ப்பு மறுக்கப்பட்டது

எனினும், அவர் பிசிசிஐ அனுமதி இன்றி அபுதாபி டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஆடியதால் அவருக்கு ஐபிஎல் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இந்திய அளவிலான கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து வெளிநாட்டு லீக்களில் ஆடும் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டார்.

தேர்வு

தேர்வு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அவரை ஐபிஎல் தொடரில் ஆட வைக்க முடியாத நிலையிலும், அந்த அணி அவரை கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தங்கள் அணியான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தேர்வு செய்தது.

வாய்ப்பு

வாய்ப்பு

முதல் சில போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறாத அவர் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். அப்போதே கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

விக்கெட் வீழ்த்தினார்

விக்கெட் வீழ்த்தினார்

அடுத்ததாக ஒரு ஓவர் பந்து வீசிய அவர் 15 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தாலும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 48வயது வீரர் டி20 போட்டியில் பங்கேற்று விக்கெட்டும் வீழ்த்தியதை அடுத்து பிற நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் வியப்படைந்தனர்.

ரசிகர்கள் வியப்பு

ரசிகர்கள் வியப்பு

யார் இந்த பிரவீன் டாம்பே? என கேள்வி எழுப்பி தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர். சிலர் 48 வயதில் தொழில்முறை கிரிக்கெட் ஆடுகிறாரா? அப்போது நாங்களும் ஆடலாமா? என வயதான கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் உற்சாகம் அடைந்தனர்.

Story first published: Thursday, August 27, 2020, 9:27 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+