For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிபிஎல்லை விட்டு வெளியேறிய ராம்நரேஷ்... சொந்த காரணங்கள்தானாம்.. ஜமய்க்கா தாலவாஸ்

ட்ரினிடாட் : கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட் மற்றும் டோபாகோ தீவுகளில் வரும் 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஜமய்க்கா தாலவாசின் உதவி பயிற்சியாளர் ராம்நரேஷ் சர்வான் தன்னுடைய சொந்த காரணங்களால் இந்த சீசனில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக தற்போது முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஸ்பின்னர் ரியான் ஆஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

18ம் தேதி துவக்கம்

18ம் தேதி துவக்கம்

சிபில் 2020 தொடர் வரும் 18ம் தேதி மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட் மற்றும் டோபோகோ தீவுகளில் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்கென தற்போது சிபில் அணி வீரர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் பயிற்சியாட்டங்களிலும் ஈடுபட்டு அதையடுத்து 18ம் தேதி சிபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

19ம் தேதி நடைபெறுகிறது

19ம் தேதி நடைபெறுகிறது

வரும் 19ம் தேதி ஜமய்க்கா தாலவாஸ் மற்றும் செயிண்ட் லூசியா சாக்ஸ் அணிகளுக்கிடையில் முதல் போட்டி துவங்கவுள்ளது. இந்நிலையில் ஜமய்க்கா தாலவாசின் உதவி பயிற்சியாளர் ராம்நரேஷ் சர்வான் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது சொந்த காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அணியின் சிஇஓ ஜெஃப் மில்லர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதிய கோச் நியமனம்

புதிய கோச் நியமனம்

அவருக்கு பதிலாக முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஸ்பின்னர் ரியான் ஆஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளதாக மில்லர் தெரிவித்துள்ளார். மேலும் தலைமை பயிற்சியாளர் பிளாய்ட் ரெய்ப்பரின் உதவியாளராக வினோத் மகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராம்நரேஷ் அணியை விட்டு விலகியுள்ளது மிகப்பெரிய இழப்பு என்றும் மில்லர் தெரிவித்துள்ளார்.

தாலவாஸ் சிஇஓ நம்பிக்கை

தாலவாஸ் சிஇஓ நம்பிக்கை

தொடர்ந்து சிபிஎல்லில் சர்ச்சைகளில் சிக்கி வந்தார் ராம்நரேஷ். தாலவாசின் நட்சத்திரம் கிறிஸ் கெயில் அந்த அணியிலிருந்து விடுவிக்கப் பட்டதற்கு ராம்நரேஷ் தான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, கடந்த 2013 மற்றும் 2016 சீசன்களில் தாலவாஸ் அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், தற்போது அணி வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதாகவும் கோப்பையை வெல்வார்கள் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, August 13, 2020, 20:54 [IST]
Other articles published on Aug 13, 2020
English summary
We are going to look to move forward -Tallawahs CEO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+