Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 விக்கெட் அள்ளிய குகெலெஜின், சேஸ்.. நபி அதிரடி பேட்டிங்.. மீண்டும் மண்ணைக் கவ்விய பேட்ரியாட்ஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது.

Recommended Video

CPL 2020: Match 6 | TKR VS JT | Narine powers Trinbago | OneIndia Tamil

பேட்ரியாட்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்து உள்ளது. பேட்ரியாட்ஸ் அணியின் முகமது நபி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்தினார்.

ஏழாவது லீக் சுற்றுப் போட்டி

ஏழாவது லீக் சுற்றுப் போட்டி

செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் இடையே ஆன ஏழாவது லீக் சுற்றுப் போட்டியில் ஸோக்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. துவக்க வீரர் பிளட்சர் 33 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

ஸோக்ஸ் பேட்டிங்

ஸோக்ஸ் பேட்டிங்

மற்றொரு துவக்க வீரர் கார்ன்வால் 5 ரன்கள் அடித்து இருந்த போது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறி பின் மீண்டும் பேட்டிங் ஆடி 16 ரன்கள் மட்டுமே சேர்த்தார். டெயால் அதிரடி ஆட்டம் ஆடி 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

சேஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். நஜிபுல்லா 24 ரன்களில் 28 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டேரன் சமி 4 ரன்கள் மட்டுமே எடுக்க ஸோக்ஸ் அணி 6 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. முகமது நபி அப்போது அதிரடி ஆட்டம் ஆடி அணியை மீட்டார்.

எம்ரிட் ஆறுதல்

எம்ரிட் ஆறுதல்

நபி 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். ஸோக்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பேட்ரியாட்ஸ் அணியின் பந்துவீச்சில் எம்ரிட் மட்டுமே 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.

முக்கிய விக்கெட்

முக்கிய விக்கெட்

அடுத்து சேஸிங் செய்ய வந்த பேட்ரியாட்ஸ் அணி விக்கெட் விக்கெட்களான துவக்க வீரர்கள் கிறிஸ் லின் 14, லீவிஸ் 29 ஆகியோரை இழந்த பின் தடுமாறத் துவங்கியது. டா சில்வா 1, டன்க் 5, போவெல் 7, சோஹைல் தன்வீர் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

காட்ரல் அதிரடி

காட்ரல் அதிரடி

தினேஷ் ரமதின் 35 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் 8 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் களமிறங்கிய பந்துவீச்சாளர் காட்ரல் அதிரடி ஆட்டம் ஆடி 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். எனினும், அந்த அதிரடி வெற்றிக்கு போதவில்லை.

ஸோக்ஸ் வெற்றி

ஸோக்ஸ் வெற்றி

ஸோக்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்ரியாட்ஸ் அணி விரைவாக விக்கெட்களை இழந்ததால் தோல்வி அடைந்தது. ஸோக்ஸ் அணியின் குகெலெஜின் 4 விக்கெட்களும், சேஸ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

சேஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்தார். நபி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், அவர் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த இருவரின் கட்டுக் கோப்பான பந்துவீச்சால் ஸோக்ஸ் அணி வெற்றி பெற்றது.

Story first published: Sunday, August 23, 2020, 0:06 [IST]
Other articles published on Aug 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+