Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா ரன் எடுத்துக்குங்க.. சவால் விட்டு சோலியை முடித்த நைட் ரைடர்ஸ்.. பேட்ரியாட்ஸ் படுதோல்வி!

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து 10வது போட்டியில் வென்று வியக்க வைத்துள்ளது.

Recommended Video

ENG vs AUS 2nd T20: Buttler guides England to series win

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தான் ஆடிய அனைத்து லீக் போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றது.

தன் கடைசி லீக் போட்டியில் பேட்ரியாட்ஸ் அணியை 77 ரன்களுக்கு சுருட்டி வீசியது நைட் ரைடர்ஸ்.

29வது லீக் போட்டி

29வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 29வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன் பேட்ரியாட்ஸ் அணி 9 லீக் போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

ஆறுதல் வெற்றி

ஆறுதல் வெற்றி

அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில், பேட்ரியாட்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கியது. அந்த அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்கு கிறிஸ் லின் - ஈவின் லீவிஸ் படு நிதான துவக்கம் அளித்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

லின் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஈவின் லீவிஸ் ஆட்டமிழந்தார். டா சில்வா 5, பென் டங்க் 2, ராம்தின் 19, இம்ரான் கான் 0, ரயாத் எம்ரிட் 15, அல்சாரி ஜோசப் 11, அர்கிபால்ட் 0, காட்ரல் 0 ரன்கள் எடுத்தனர்.

77 ரன்களுக்கு ஆல் அவுட்

77 ரன்களுக்கு ஆல் அவுட்

பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஹோசின் 2, சிக்கந்தர் ராசா 1, பாவாத் அஹ்மத் 4, பிரவின் டாம்பே 1, அலி கான் 1, பிலிப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

நைட் ரைடர்ஸ் பேட்டிங்

நைட் ரைடர்ஸ் பேட்டிங்

78 ரன்கள் என்ற சிறிய இலக்குடன் களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு வெப்ஸ்டர் - ஜாங்கூ துவக்கம் அளித்தனர். ஜாங்கூ 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து செய்பர்ட் களமிறங்கினார். அந்த அணி அதிரடியாக ரன் குவித்தது.

அபார வெற்றி

அபார வெற்றி

11.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. இது அந்த அணி தொடர்ந்து பெறும் 10வது வெற்றி ஆகும். அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று உள்ளது அந்த அணி.

அரை இறுதியில் நைட் ரைடர்ஸ்

அரை இறுதியில் நைட் ரைடர்ஸ்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் 4 விக்கெட் வீழ்த்திய பாவாத் அஹ்மத் ஆட்டநாயகன் விருதை வென்றார். அரை இறுதியில் அந்த அணி ஜமைக்கா தலவாஸ் அணியை சந்திக்க உள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ளது.

Story first published: Monday, September 7, 2020, 12:15 [IST]
Other articles published on Sep 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+