Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி.. சிக்ஸர் மழை பொழிந்த லீவிஸ்.. கடைசி ஓவர் பரபரப்பு.. அசால்ட் காட்டிய பென் டங்க்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : பேட்ரியாட்ஸ் அணி வரிசையாக தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் ஈவின் லீவிஸ் மற்றும் பென் டங்க் அதிரடியால் அந்த அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Recommended Video

CPL 2020 SNP VS BT Patriots won by 6 wickets | Oneindia Tamil

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது பேட்ரியாட்ஸ் அணி.

11வது லீக் போட்டி

11வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 11வது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தன. அதிலும் பேட்ரியாட்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்தது.

பார்படோஸ் நிதானம்

பார்படோஸ் நிதானம்

இந்த நிலையில், பேட்ரியாட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் அணியின் துவக்க வீரர்கள் ரன் எடுத்தாலும், குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினர். சார்லஸ் 24 பந்துகளில் 24 ரன்களும், ஹோப் 30 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர்.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

ஹோல்டர் 2 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். மேயர்ஸ் 22, கோரி ஆண்டர்சன் 31, ஆஷ்லே நர்ஸ் 25 ரன்கள் எடுத்தனர். இவர்கள் மூவரும் நல்ல ரன் ரேட்டில் ரன் குவித்ததால் ஸ்கோர் உயர்ந்தது. ரஷித் கான் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

151 ரன்கள்

151 ரன்கள்

பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. பேட்ரியாட்ஸ் அணியின் ஜாகேசார் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அடுத்து சவாலான இலக்கை நோக்கி ஆடிய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் லின் - லீவிஸ் அதிரடி துவக்கம் அளித்தனர். 4 ஓவர்களில் 34 ரன்கள் குவித்தது அந்த அணி.

லீவிஸ் சிக்ஸர் மழை

லீவிஸ் சிக்ஸர் மழை

லின் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். டா சில்வா 1 ரன் மட்டுமே எடுத்தார். தினேஷ் ரம்தின் நிதான ஆட்டம் ஆடி அணியின் ரன் ரேட்டை குறைத்தார். மறுபுறம் லீவிஸ் சிக்ஸர் மழை பொழிந்து வந்ததால் இலக்கை நோக்கி நகர்ந்தது பேட்ரியாட்ஸ்.

60 பந்துகளில் 89 ரன்கள்

60 பந்துகளில் 89 ரன்கள்

ரமதின் 32 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது பென் டங்க் களமிறங்கினார். 9 பந்துகளில் 20 ரன்கள் தேவை எனும் நிலையில் லீவிஸ் ஆட்டமிழந்தார். லீவிஸ் 60 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இருந்தார். 2 ஃபோர், 9 சிக்ஸ் அடித்து மிரட்டி இருந்தார் அவர்.

டங்க் விளாசல்

டங்க் விளாசல்

லீவிஸ் சென்ற பின் டங்க் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார் 19வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 7 ரன் எடுத்த அவர், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை எனும் நிலையில் இரண்டு சிக்ஸ் அடித்து பேட்ரியாட்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

பேட்ரியாட்ஸ் அணி வெற்றி

பேட்ரியாட்ஸ் அணி வெற்றி

19.3 ஓவரில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. பார்படோஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதிரடி ஆட்டம் ஆடி 89 ரன்கள் குவித்த லீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Story first published: Wednesday, August 26, 2020, 12:06 [IST]
Other articles published on Aug 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+