Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

44 பந்தில் 71 ரன்.. 11 பவுண்டரி.. சரமாரி விளாசல்.. தனி ஆளாக சேஸிங்கை முடித்த ஹெட்மயர்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 4வது லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தியது.

Recommended Video

CPL 2020 Match 4 | GAW vs SNP | Guyana Amazon Warriors won by 3 wkts

கயானா அணியின் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி சேஸிங்கில் தனி ஆளாக தன் அணியை வெற்றி பெற வைத்தார். பந்துவீச்சில் கீமோ பால் 4 விக்கெட் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

நான்காவது போட்டி

நான்காவது போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்றின் நான்காவது போட்டியில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

டாஸ்

டாஸ்

கயானா அமேசான் வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கிறிஸ் லின் - ஈவின் லீவிஸ் என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

கிறிஸ் லின்-ஐ நான்காவது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்தி அசத்தினார் இம்ரான் தாஹிர். அதிரடி ஆட்டம் ஆடி 18 பந்துகளில் 30 ரன்கள் குவித்த லீவிஸ் க்ரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கெல்லி 5, ரம்தின் 9 ரன்கள் எடுத்து கீமோ பால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பேட்ரியாட்ஸ் ஸ்கோர்

பேட்ரியாட்ஸ் ஸ்கோர்

டன்க் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஹாமில்டன் 2 ரன்கள் எடுத்து தாஹிர் பந்துவீச்சிலும், எம்ரிட் 17, ட்ரேக்ஸ் 8 ரன்கள் எடுத்து கீமோ பால் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கீமோ பால் 4 விக்கெட்

கீமோ பால் 4 விக்கெட்

கீமோ பால் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். க்ரீன் 1 விக்கெட் வீழ்த்தினார்.

கயானா சேஸிங்

கயானா சேஸிங்

அடுத்து சேஸிங் செய்த கயானா அணிக்கு துவக்க வீரர் பிரான்டன் கிங் 10, ஹேம்ராஜ் 19 ரன்களில் ஆட்டமிழந்து சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து ஹெட்மயர் தனி ஆளாக போட்டியில் போராடத் துவங்கினார். மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

ராஸ் டெய்லர் 9, நிக்கோலஸ் பூரன் 0, ரூதர்போர்டு 10, கீமோ பால் 0 என வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்தன. ரன் ரேட் அழுத்தம் இல்லாவிட்டாலும் விக்கெட் வீழ்ச்சி லேசாக பயமுறுத்தியது. சிறப்பாக ஆடிய ஹெட்மயர் வெற்றிக்கு 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

ஹெட்மயர் அதிரடி

ஹெட்மயர் அதிரடி

ஹெட்மயர் அதிரடியாக 8 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து 44 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின் க்ரீன், ஷெப்பர்ட் இணைந்து வெற்றி இலக்கை எட்டச் செய்தனர். வெற்றிக்கு தேவையான ரன்களில் பாதிக்கும் மேல் ஹெட்மயர் சேர்த்து கயானா அணியை வெற்றி பெற வைத்தார்.

Story first published: Thursday, August 20, 2020, 11:06 [IST]
Other articles published on Aug 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+