Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேணாம் பிலிப்ஸு.. சொன்னாக் கேளு.. கடைசி வரை அவுட் ஆகலையே.. பேட்ரியாட்ஸ் அணியை கதற வைத்த வீரர்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : ஜமைக்கா தலவாஸ் அணி துவக்க வீரர் கிளென் பிலிப்ஸ்-இன் பொறுப்பான ஆட்டத்தால் பேட்ரியாட்ஸ் அணி தோல்வி அடைந்தது.

பேட்ரியாட்ஸ் அணி ஏற்கனவே அதிக தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2020 கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜமைக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

ஜமைக்கா தலவாஸ் அணிக்கு பிலிப்ஸ் - போன்னர் துவக்கம் அளித்தனர். போன்னர் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிளாக்வுட் நிதான ஆட்டம் ஆடி 27 ரன்கள் எடுத்தார். ஆசிப் அலி 14, போவெல் 1, பிராத்வைட் 0, வால்டன் 1 ரன்னில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

நங்கூரம் போட்ட பிலிப்ஸ்

நங்கூரம் போட்ட பிலிப்ஸ்

விக்கெட்கள் ஒரு பக்கம் சரிந்து கொண்டே இருக்க மறுபக்கம் கிளென் பிலிப்ஸ் நங்கூரம் போட்டது போல நின்று ரன் குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காத அவர் 61 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். 2 ஃபோர், 6 சிக்ஸ் அடித்து இருந்தார்.

147 ரன்கள்

147 ரன்கள்

பிலிப்ஸ் விக்கெட்டை பாதி இன்னிங்க்ஸில் வீழ்த்தி இருந்தால் கூட பேட்ரியாட்ஸ் அணி, ஜமைக்காவை குறைந்த ரன்களில் சுருட்டி இருக்கும். ஆனால், பிலிப்ஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்து இருந்தது.

இம்ரான் கான் மிரட்டல்

இம்ரான் கான் மிரட்டல்

பேட்ரியாட்ஸ் அணியின் இம்ரான் கான் 4 ஓவர்கள் வீசி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி மிரட்டி இருந்தார். கேப்டன் ரியாத் எம்ரிட் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். காட்ரல், இஷ் சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

பேட்ரியாட்ஸ் சொதப்பல்

பேட்ரியாட்ஸ் சொதப்பல்

அடுத்து 148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பேட்ரியாட்ஸ் அணிக்கு கிறிஸ் லின் 8 ரன்களில் ஆட்டமிழந்து சுமாரான துவக்கம் அளித்தார். போவெல் 21, ரமதின் 13, பென் டங்க் 2 ரன்களில் வெளியேறினர். நிக் கெல்லி 16, ஈவின் லீவிஸ் 21 ரன்கள் எடுத்து இடையே ஓரளவு ரன் சேர்த்தனர்.

பேட்ரியாட்ஸ் தோல்வி

பேட்ரியாட்ஸ் தோல்வி

எனினும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 19.4 ஓவரில் பேட்ரியாட்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிராத்வைட் 3, பிடல் எட்வர்ட்ஸ் 2, பெருமாள் 2, லாமிச்சேன் 2, முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஜமைக்கா அணி வெற்றி

ஜமைக்கா அணி வெற்றி

ஜமைக்கா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 79 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜமைக்கா அணி 6 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

Story first published: Sunday, August 30, 2020, 14:07 [IST]
Other articles published on Aug 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+