Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிபிஎல்லின் இறுதியில் உள்ள அணிகள் மோதல்... போட்டியில் வென்று முன்னேறுமா என ரசிகர்கள் ஆவல்

ட்ரினிடாட் : கரீபியன் பிரீமியர் லீக்கின் போட்டிகள் ஆரம்பித்து நடைபெற்றுவரும் நிலையில் இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணியளவில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் -பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.

Recommended Video

CPL 2020 SNP VS BT Patriots won by 6 wickets | Oneindia Tamil

புள்ளி பட்டியலில் இறுதி இடங்களில் உள்ள இந்த அணிகள் ஏற்கனவே 3 போட்டிகளில் பங்கேற்ற நிலையில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 3 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் ஒரு போட்டியில் மட்டும் வெற்றியடைந்துள்ளது.

இதையடுத்து பட்டியலில் முன்னேற இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டுகின்றன.

தொடரின் 11வது ஆட்டம்

தொடரின் 11வது ஆட்டம்

மேற்கிந்திய தீவுகளில் டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்த தொடரின் 11வது போட்டியில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியும் பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் அணியும் இன்று ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாட்ரியாஸ் -பார்படாஸ் அணிகள் மோதல்

பாட்ரியாஸ் -பார்படாஸ் அணிகள் மோதல்

இந்த தொடரில் இறுதி இரண்டு இடங்களில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் மற்றும் பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் அணிகள் உள்ளன. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று இறுதி இடத்திலும் பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் அணி ஒரு போட்டியில் வென்று அதற்கு முந்தைய இடத்திலும் உள்ளது.

4வது போட்டியில் மோதல்

4வது போட்டியில் மோதல்

இரு அணிகளும் தங்களது 4வது போட்டியில் இன்று மோதவுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் முன்னேறும்வகையில் இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு அணிகளிலும் முன்னணி வீரர்கள் உள்ளநிலையில், அவர்களது இன்றைய ஆட்டம் தரமாக சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பான ஆட்ட அனுபவம்

சிறப்பான ஆட்ட அனுபவம்

செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் லின், ஷெல்டன் காட்ரெல் உள்ளிட்ட வீரர்களும் இதேபோல,, பார்படாஸ் ட்ரிரெண்ட்ஸ் அணியின் சாய் ஹோப், கேப்டன் ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான் உள்ளிட்ட வீரர்களும் ரசிகர்களுக்கு சிறப்பான ஆட்ட அனுபவத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, August 25, 2020, 18:51 [IST]
Other articles published on Aug 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+