Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முடிஞ்சா என் பவுலிங்கை தொட்டுப் பாரு.. சவால் விட்ட சிஎஸ்கே வீரர்.. சரண்டர் ஆன லூசியா!

டரூபா : செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி டெஸ்ட் போட்டி போல ஆடி படுதோல்வி அடைந்தது.

Recommended Video

Malinga to miss IPL 2020, Pattinson replaces him | OneIndia Tamil

அனுபவ பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் ஓவர்களில் அந்த அணி ரன்னே எடுக்க முடியாமல் தவித்தது. அதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

செயின்ட் லூசியா - கயானா போட்டி

செயின்ட் லூசியா - கயானா போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 24வது லீக் சுற்றுப் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கயானா அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

ரக்கீம் கார்ன்வால்

ரக்கீம் கார்ன்வால்

முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா அணிக்கு பிளட்சர் 1, பவுச்சர் 1 ரன்னில் வரிசையாக ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். துவக்க வீரர் ரக்கீம் கார்ன்வால் மட்டுமே அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இறுதி நேரத்தில் கிளென் 22 பந்தில் 23 ரன்கள் சேர்த்தார்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்ததுடன், அதிக பந்துகளை வீணடித்தனர். செயின்ட் லூசியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. கயானா அணியின் பந்துவீச்சு அபாரமாக அமைந்தது.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

சின்கிளேர் தவிர, மற்ற பந்துவீச்சாளர்களான கிரிஸ் கிரீன், நவீன் உல் ஹக், ஷெப்பர்ட், இம்ரான் தாஹிர், கீமோ பால் குறைந்த அளவிலேயே ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதிலும் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

கயானா சேஸிங்

கயானா சேஸிங்

110 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய கயானா அணிக்கு பிரான்டன் கிங் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஹேம்ராஜ் 26 ரன்கள் குவித்தார். நிக்கோலஸ் பூரன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வெற்றி

வெற்றி

ஷிம்ரான் ஹெட்மயர் 36 பந்துகளில் 56 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். கயானா அணி 13.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா அணியை வீழ்த்தியது.

Story first published: Thursday, September 3, 2020, 12:46 [IST]
Other articles published on Sep 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+