Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களால முடியலை சாமி.. பவுலிங்ல வைச்சு செஞ்சது பத்தாதா? இது வேறயா? கதறி சரண்டர் ஆன பேட்ரியாட்ஸ் அணி

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி, பேட்ரியாட்ஸ் அணியை 110 ரன்களில் சுருட்டியது.

அத்துடன் நில்லாமல் சேஸிங்கில் கார்ன்வால் காட்டிய அதிரடியால் மிரண்ட அந்த அணி படுதோல்வி அடைந்தது.

செயின்ட் லூசியா அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

15வது லீக் போட்டி

15வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 15வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் செயின்ட் லூசியா அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

வலை விரித்த லூசியா

வலை விரித்த லூசியா

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதை கணித்தே அந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது. அதற்கேற்ப முதல் ஓவரில் முகமது நபி பந்து வீசினார். அவரது வலையில் பேட்ரியாட்ஸ் அணியின் கிறிஸ் லின், நிக் கெல்லி வீழ்ந்தனர்.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

அடுத்து நபி வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரில் ஈவின் லீவிஸ் மற்றும் தினேஷ் ரமதின் ஆட்டமிழந்தனர். பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. அதைத் தொடர்ந்து சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து பேட்ரியாட்ஸ் அணியை மடக்கினார் லூசியா அணியின் கேப்டன் சமி.

முடக்கிய சுழற் பந்துவீச்சாளர்கள்

முடக்கிய சுழற் பந்துவீச்சாளர்கள்

ஜாகிர் கான், கார்ன்வால், ராஸ்டன் சேஸ், முகமது நபி என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்ரியாட்ஸ் அணியின் ரன் ரேட்டை முற்றிலுமாக முடக்கினர். நபி தன் ஐந்தாவது விக்கெட்டாக சோஹைல் தன்வீரை வீழ்த்தினார்.

110 ரன்கள்

110 ரன்கள்

கார்ன்வால், ஜாகிர் கான், குகலெஜின், வில்லியம்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. 111 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய லூசியா அணிக்கு கார்ன்வால் யாருமே எதிர்பார்க்காத துவக்கத்தை அளித்தார்.

ஈவு இரக்கமே இன்றி அதிரடி

ஈவு இரக்கமே இன்றி அதிரடி

சுமார் ஏழு அடி உயரம் கொண்ட கார்ன்வால் சோஹைல் தன்வீர் வீசிய முதல் ஓவரில் ஈவு இரக்கமே இன்றி 2 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து 20 ரன்கள் குவித்தார். அப்போது போட்டியில் லூசியா அணியின் வெற்றி உறுதி ஆகி விட்டது.

மிரள வைத்த கார்ன்வால்

மிரள வைத்த கார்ன்வால்

கார்ன்வால் 11 பந்துகளில் 26 ரன்கள் குவித்து மிரள வைத்து வெளியேறினார். டெயால் டக் அவுட் ஆனார். எனினும், பிளட்சர் 16, ராஸ்டன் சேஸ் 27*, நஜிபுல்லா சத்ரான் 33 ஆகியோர் ரன் குவித்து தங்கள் அணியை 14.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

செயின்ட் லூசியா ஸோக்ஸ் வெற்றி

செயின்ட் லூசியா ஸோக்ஸ் வெற்றி

செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சுருண்டு போய் சோர்ந்து இருந்த பேட்ரியாட்ஸ் அணியை பேட்டிங்கிலும் மரண அடி அடித்து சரணடைய வைத்தார் கார்ன்வால். 5 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்த நபி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Story first published: Thursday, August 27, 2020, 23:44 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+