Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லூசியாவை தெறிக்கவிட்ட பிராவோ.. 8 ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

Recommended Video

CPL 2020 Match 13 STZ VS TKR ; Trinbago won by 6 wickets | OneIndia Tamil

பிராவோ மிரட்டலாக பந்து வீசி குறைந்த ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அவரது பந்துவீச்சின் காரணமாக லூசியா அணி குறைந்த ரன்களே எடுத்தது.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 13வது லீக் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. செயின்ட் லூசியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிளட்சர் 10, கார்ன்வால் 18 ரன்கள் மட்டுமே எடுத்தனர். டெயால் 23 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முகமது நபி போராட்டம்

முகமது நபி போராட்டம்

சேஸ் 7, சத்ரான் 21 ரன்கள் எடுத்தனர். வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் முகமது நபி அணியை காப்பாற்ற முயற்சி செய்தார். அவர் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது.

நைட் ரைடர்ஸ் அபாரம்

நைட் ரைடர்ஸ் அபாரம்

17.1 ஓவரில் செயின்ட் லூசியா அணி 6 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு செயின்ட் லூசியா அணியை கட்டுப்படுத்தியது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

விரைவாக ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தில் நைட் ரைடர்ஸ் அணி விக்கெட்களை இழந்தது. சிம்மன்ஸ் 0, வெப்ஸ்டர் 5, மன்றோ 8 பந்துகளில் 17, பொல்லார்டு 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டேரன் பிராவோ - செய்பர்ட் அணியை மீட்டனர்.

பிராவோ - செய்பர்ட்

பிராவோ - செய்பர்ட்

டேரன் பிராவோ 13 பந்துகளில் 23 ரன்கள் குவித்தார். செய்பர்ட் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 ஓவர்களில் 72 ரன்களை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி.

பிராவோ சாதனை

பிராவோ சாதனை

கடந்த மூன்று போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய மூத்த வீரர் பிராவோ இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். பிராவோ 500 டி20 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையையும் செய்தார்.

Story first published: Thursday, August 27, 2020, 10:32 [IST]
Other articles published on Aug 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+