
ஐந்தாவது போட்டி
2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் ஐந்தாவது போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் - பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிகள் மோதின. பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பார்படோஸ் பேட்டிங்
பார்படோஸ் அணியின் துவக்க வீரர் ஷாய் ஹோப் 19, சார்லஸ் 35 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த ஆண்டர்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். மேயர்ஸ் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிரடி ஆட்டம் ஆடி ஆறுதல் அளித்தார்.

ஹோல்டர் அதிரடி
ஜேசன் ஹோல்டர் 12 பந்துகளில் 2 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து 27 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம், இருந்தது. 18.1 ஓவரில் பார்படோஸ் அணி 131 ரன்கள் எடுத்து இருந்தது.

மழை
அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. நர்ஸ் 16, சான்ட்னர் 8 ரன்களுடன் ஆடி வந்தனர். அதன் பின் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியில் ஓவர்கள் குறைந்தன. மழை விட்ட பின் டக்வோர்த் லீவிஸ் முறைப்படி செயின்ட் லூசியா அணிக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

5 ஓவர்கள்
5 ஓவர்களில் 47 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சேஸிங்கை துவங்கியது செயின்ட் லூசியா. அந்த அணியின் துவக்க வீரர் கார்ன்வால் 8 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். ஹாட்ரிக் ஃபோர் அடித்தார்.

லூசியா வெற்றி
மற்றொரு துவக்க வீரர் பிளட்சர் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நஜிபுல்லா 5 ரன்கள் எடுத்தார். முகமது நபி அதிரடியாக ரஷித் கான் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 15 ரன்கள் சேர்த்து பின் ஆட்டமிழந்தார். செயின்ட் லூசியா அணி 4.1 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications











