Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கேப்டன்சி மாதிரியே.. மேட்ச்சை தலைகீழாக மாற்றிய டேரன் சமி.. மண்ணைக் கவ்விய ஜமைக்கா!

டரூபா : குறைந்த ஸ்கோர் எடுத்த போட்டிகளில் பலமுறை கேப்டனாக தோனி சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

எதிரணியை பந்துவீச்சின் மூலம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும் அதை பல முறை நாம் பார்த்துள்ளோம்.

அதே போலவே கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கேப்டன் டேரன் சாமி, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

கடைசி லீக் போட்டி

கடைசி லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் லீக் சுற்றின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கு முன்பே இரண்டு அணிகளுமே அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தன.

செயின்ட் லூசியா பேட்டிங்

செயின்ட் லூசியா பேட்டிங்

செயின்ட் லூசியா ஸோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் கார்ன்வால் 29 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். டெயால் 13, பிளட்சர் 1, நபி 2 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

ராஸ்டன் சேஸ், நஜிபுல்லா சத்ரான் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். நஜிபுல்லா சத்ரான் 35 ரன்கள் சேர்த்தார். கிளென் 1 ரன்னில் வெளியேறினார். சேஸ் 32 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சமி கடைசி நேரத்தில் 7 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

ஜமைக்கா பந்துவீச்சு

ஜமைக்கா பந்துவீச்சு

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது செயின்ட் லூசியா அணி. ஜமைக்கா அணியின் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். சந்தீப் லாமிச்சேன் 4 ஓவர்கள் வீசி பெருஒரு மெய்டன் உட்பட 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். எட்வர்ட்ஸ், பெருமாள், பிராத்வைட் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

அபார துவக்கம்

அபார துவக்கம்

146 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய ஜமைக்கா தலவாஸ் அணிக்கு பிளாக்வுட், பிலிப்ஸ் அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. பிலிப்ஸ் 36 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

திட்டமிட்டு வீழ்த்திய டேரன் சமி

திட்டமிட்டு வீழ்த்திய டேரன் சமி

அடுத்து பிளாக்வுட் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் படுநிதானமாக 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ஜமைக்கா அணியை திட்டமிட்டு வீழ்த்தினார் டேரன் சமி. பந்துவீச்சை சரியாக மாற்றி விக்கெட் வேட்டை நடத்த காரணமாக இருந்தார்.

நிக்கோலஸ் கிர்ட்டன் நம்பிக்கை

நிக்கோலஸ் கிர்ட்டன் நம்பிக்கை

ரோவ்மன் போவெல் 2, ஆண்ட்ரே ரஸ்ஸல் 0, வால்டன் 10, பிராத்வைட் 1, பெருமாள் 0 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி நேரத்தில் நிக்கோலஸ் கிர்ட்டன் அதிரடி ஆட்டம் ஆடி ஜமைக்கா அணிக்கு நம்பிக்கை அளித்து வந்தார்.

டேரன் சமி சொன்ன யோசனை

டேரன் சமி சொன்ன யோசனை

கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் கிர்ட்டன் அதை எளிதாக எடுத்து விடுவார் என்பது போலவே சூழ்நிலை இருந்தது. 19வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். அப்போது பந்துவீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ்-இடம் பேசிய டேரன் சமி சில யோசனைகளை கூறினார்.

இரண்டு விக்கெட்கள்

இரண்டு விக்கெட்கள்

சரியாக அடுத்த பந்தில் நிக்கோலஸ் கிர்ட்டன் பவுல்டு அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்திலேயே லாமிச்சேன் டக் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது ஜமைக்கா அணி. அந்த ஓவரை ராஸ்டன் சேஸ் சிறப்பாக வீசினார்.

வெற்றி

வெற்றி

9 விக்கெட்கள் இழந்த நிலையில் அந்த ஓவரில் ஜமைக்கா அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. செயின்ட் லூசியா 11 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வில்லியம்ஸ் மட்டுமின்றி வீராசாமி பெருமாள், ஜாகிர் கான் என இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

Story first published: Monday, September 7, 2020, 20:25 [IST]
Other articles published on Sep 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+