Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி? அதிர்ச்சி அடைந்த சிஎஸ்கே ரசிகர்கள்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கரீபியன் பிரீமியர் லீக் 2020 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வரும் டிவைன் பிராவோ குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Recommended Video

Virat Kohli completes 12 years in International Cricket

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியுடனான முதல் லீக் போட்டியில் அவரது செயல்பாடு மோசமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம்.

கரீபியன் பிரீமியர் லீக் டி20

கரீபியன் பிரீமியர் லீக் டி20

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டி என்பதால் பெரும் பரபரப்பு இருந்தது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

போட்டிக்கு முன் மழை பெய்ததால் போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. இரு அணிகளுக்கும் தலா 17 ஓவர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

கயானா பேட்டிங்

கயானா பேட்டிங்

கயானா அணியில் துவக்க வீரர்கள் ஏமாற்றினாலும் ராஸ் டெய்லர் - ஷிம்ரான் ஹெட்மயர் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. ஷிம்ரான் ஹெட்மயர் அரைசதம் கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கயானா அணி 17 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது.

பிராவோவை அழைத்த கேப்டன்

பிராவோவை அழைத்த கேப்டன்

ட்ரின்பாகோ அணியின் பந்துவீச்சை ராஸ் டெய்லர் - ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடிய நிலையில், அந்த அணியின் கேப்டன் கீரான் பொல்லார்டு, டிவைன் பிராவோவை களமிறக்கினார். ஆனால், அதுவும் பலன் தரவில்லை.

40 ரன்கள்

40 ரன்கள்

பிராவோ 4 ஓவர்கள் பந்துவீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார் பிராவோ. ஒரு விக்கெட் வீழ்த்தியது மட்டுமே ஒரே ஆறுதலாக அமைந்தது.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

பிராவோவின் இந்த மோசமான ஆட்டத்தை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அடுத்து வரும் போட்டிகளிலாவது பிராவோ சிறப்பாக பந்துவீச வேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.

தோனியின் பவுலர்

தோனியின் பவுலர்

சிஎஸ்கே அணியில் தோனி ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உடனே பிராவோவை தான் அழைப்பார். இந்த நிலையில், அவரே மோசமான பார்மில் இருப்பது அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது.

Story first published: Wednesday, August 19, 2020, 0:42 [IST]
Other articles published on Aug 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+