For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

65 பந்தில் 96 ரன்.. 2 பேரும் என்ன ஒரு வெறியாட்டம்.. ரொம்ப நாள் கழிச்சு செம டி20 பேட்டிங்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : ராஸ் டெய்லர், ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தால் நிலை குலைந்தது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

Recommended Video

Virat Kohli completes 12 years in International Cricket

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்த அணியை எளிதாக சமாளித்து ரன் குவித்தது கயானா அணி.

முதல் போட்டி

முதல் போட்டி

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இடையே லீக் சுற்றின் முதல் போட்டி நடைபெற்றது. மழையால் இந்தப் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு, தாமதமாக துவங்கியது. ட்ரின்பாகோ அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

துவக்கத்திலேயே அதிர்ச்சி

துவக்கத்திலேயே அதிர்ச்சி

கயானா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் பிரான்டன் கிங் போட்டியின் மூன்றாவது பந்தில் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரர் சந்தர்பால் ஹேமராஜ் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஹெட்மயர் - ராஸ் டெய்லர் ஜோடி

ஹெட்மயர் - ராஸ் டெய்லர் ஜோடி

23 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கயானா அணிக்கு கை கொடுத்தது ஹெட்மயர் - ராஸ் டெய்லர் ஜோடி. இருவரும் சேர்ந்து 50 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். ராஸ் டெய்லர் அதிரடி ஆட்டம் ஆடினார்.

டெய்லர் அதிரடி

டெய்லர் அதிரடி

21 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார் ராஸ் டெய்லர். அவர் 2 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து மிரட்டினார். அவர் சென்ற பின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். அவர் 16 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

கயானா ஸ்கோர்

கயானா ஸ்கோர்

ரூதர்போர்டு டக் அவுட் ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த கீமோ பால் - ஹெட்மயர் ஜோடி கடைசி மூன்று ஓவர்களில் சிறப்பாக ரன் குவித்தனர். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 17 ஓவர்களில் 144 ரன்கள் குவித்தது.

அதிரடி

அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக நீண்ட நாட்களாக இது போன்ற அதிரடி டி20 லீக் போட்டிகளை காணாமல் தவித்து வந்த ரசிகர்களுக்கு இவர்களின் அதிரடி பேட்டிங் தீனியாக அமைந்தது. ட்ரின்பாகோ அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

Story first published: Tuesday, August 18, 2020, 23:42 [IST]
Other articles published on Aug 18, 2020
English summary
CPL 2020 TKR vs GAW : Ross Taylor, Shimron Hetmyer hard hitting helped Guayana Amazon Warriors to reach 144 runs in 17 overs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+