Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்மட்டி அடி.. செமி பைனலில் ஓங்கி அடித்த நைட் ரைடர்ஸ்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா படுதோல்வி

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் அரை இறுதிப் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

லீக் சுற்றில் தான் ஆடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று நைட் ரைடர்ஸ், அரை இறுதியிலும் வென்று தோல்வியே அடையாத அணியாக வலம் வருகிறது.

முதல் அரை இறுதிப் போட்டி

முதல் அரை இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து அரை இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. முதல் அரை இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. ட்ரின்பாகோ அணி டாஸ் வென்றது.

பேட்டிங்கில் தடுமாறிய ஜமைக்கா

பேட்டிங்கில் தடுமாறிய ஜமைக்கா

டாஸ் வென்ற ட்ரின்பாகோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஜமைக்கா தலவாஸ் அணி துவக்கம் முதலே பேட்டிங்கில் தடுமாறியது. சுழற் பந்துவீச்சை ஆயுதமாக வைத்து ஜமைக்கா அணியை நிலை குலைய வைத்தது ட்ரின்பாகோ.

விக்கெட் சரிவு

விக்கெட் சரிவு

ஹோசெய்ன் பந்துவீச்சில் பிளாக்வுட் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து பிலிப்ஸ் 2, முஜீப் 0, ஆசிப் அலி 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 25 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது ஜமைக்கா.

போன்னர், ரோவ்மன் போவெல் ஆறுதல்

போன்னர், ரோவ்மன் போவெல் ஆறுதல்

போன்னர், ரோவ்மன் போவெல் நிதான ஆட்டம் ஆடி ரன் சேர்த்தனர். போன்னர் 41 ரன்களும், போவெல் 33 ரன்களும் எடுத்தனர். அதிரடி மன்னன் ரஸ்ஸல் 2 ரன்கள் எடுத்த நிலையில் அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது ஜமைக்கா தலவாஸ் அணி. ட்ரின்பாகோ அணியின் ஹோசெய்ன் 3, பியர்ரே 2, சுனில் நரைன் 1, பாவாத் அஹ்மத் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஜமைக்கா அணி வெல்வது கடினம் என்ற நிலையில் பந்து வீச வந்தது.

சிம்மன்ஸ் - வெப்ஸ்டர்

சிம்மன்ஸ் - வெப்ஸ்டர்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு சிம்மன்ஸ் - சுனில் நரைன் துவக்கம் அளித்தனர். நரைன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து சிம்மன்ஸ் - வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்து 15 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டச் செய்தனர்.

அபார வெற்றி

அபார வெற்றி

சிம்மன்ஸ் 54, வெப்ஸ்டர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி அதில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

நான்காவது இறுதிப் போட்டி

நான்காவது இறுதிப் போட்டி

இந்த சீசனில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தோல்வியே அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இது அந்த அணியின் நான்காவது இறுதிப் போட்டி ஆகும். இதற்கு முன் மூன்று இறுதிப் போட்டிகளில் ஆடி, மூன்றிலும் கோப்பை வென்றுள்ளது அந்த அணி.

Story first published: Wednesday, September 9, 2020, 11:32 [IST]
Other articles published on Sep 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+