Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் இருக்குற வரைக்கும் நைட் ரைடர்ஸ்-ஐ தொடக்கூட முடியாது.. செம அடி வாங்கிய ஜமைக்கா!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ஜமைக்கா அணியை புரட்டிப் போட்டு வெற்றி பெற்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

Recommended Video

CPL 2020: Match 6 | TKR VS JT | Narine powers Trinbago | OneIndia Tamil

முதல் போட்டி போலவே சுனில் நரைன் இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணிக்கு பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பக்க பலமாக இருந்தார்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் ஆறாவது லீக் போட்டி ஜமைக்கா தலவாஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

டக் அவுட்கள்

டக் அவுட்கள்

அந்த அணியின் துவக்க வீரர் வால்டன் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கிர்டன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். கேப்டன் ரோவ்மன் போவெல் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜமைக்கா 3 விக்கெட்களை இழந்து தவித்தது.

பிலிப்ஸ் அரைசதம்

பிலிப்ஸ் அரைசதம்

துவக்க வீரர் பிலிப்ஸ் மட்டுமே 42 பந்தில் 58 ரன்கள் எடுத்து இருந்தார். ஆசிப் அலி 22, பிறாத்வைட் 1 ரன் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் 26 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடாமல் ஏமாற்றம் அளித்தார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுனில் நரைன் பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டார். 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அலி கான் 2, ஸீல்ஸ் 2, பாவாத் அஹ்மது 1, பிராவோ 1 விக்கெட் வீழ்த்தினர். பாவாத் அஹ்மது ஒரு மெய்டன் ஓவர் வீசியதும் குறிப்பிடத்தக்கது.

ட்ரின்பாகோ சேஸிங்

ட்ரின்பாகோ சேஸிங்

அடுத்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர் சிம்மன்ஸ் டக் அவுட் ஆனார். மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் வழக்கம் போல சிக்ஸ், ஃபோர் அடித்து அதிரடி ஆட்டம் ஆடினார்.

நரைன் அதிரடி அரைசதம்

நரைன் அதிரடி அரைசதம்

மூன்றாவது பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய மன்றோ சிறப்பாக ஒத்துழைப்பு அளித்தார். நரைன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரன் பிராவோ 14 ரன்களில் வெளியேறினார். மன்றோ - பொல்லார்டு இணைந்து வெற்றி இலக்கை எட்டச் செய்தனர்.

மன்றோ 49 ரன்கள்

மன்றோ 49 ரன்கள்

மன்றோ 49 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் பொல்லார்டு 5 ரன்களுடன் களத்தில் இருந்தார். 18.1 ஓவரில் 136 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

ட்ரின்பாகோ முதல் இடம்

ட்ரின்பாகோ முதல் இடம்

ட்ரின்பாகோ அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிளும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ஜமைக்கா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் நான்காம் இடத்தில் உள்ளது. ட்ரின்பாகோ அணியின் இரண்டு வெற்றிகளிலும் சுனில் நரைன் தான் ஆட்டநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 21, 2020, 13:37 [IST]
Other articles published on Aug 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+